உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

இனி, குலோத்துங்கன் மெய்க்கீர்த்தியைக் கூர்ந்து நோக்குங் கால், இவன் பாண்டியரோடும், சேரரோடும் நிகழ்த்திய போர்கள் ஓராண்டிலேயே தொடர்ந்து நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாகின்றது.

தென்கலிங்கப் போர்

-

குலோத்துங்கனுடைய மெய்க்கீர்த்திகள் இவன் இரண்டு கலிங்கப் போர்களில் வெற்றி பெற்றான் என்று கூறுகின்றன. அவற்றுள், ஒன்று இவனது ஆட்சியின் 26 ஆம் ஆண்டுக் கல்வெட்டில் மிகச் சுருக்கமாகக் காணப்படுகின்றது. மற்றொன்று 42-ஆம் ஆண்டு கல்வெட்டில் விரிவாகச் சொல்லப் பட்டுள்ளது'. எனவே, முதற் கலிங்கப்போர் கி. பி. 1096 - இல் நடைபெற்ற தாதல் வேண்டும். முதற்கலிங்கப்போரே தென்கலிங்கப் போராகும்.

தென்கலிங்கம் என்பது கோதாவரி யாற்றிற்கும் மகேந்திர கிரிக்கும் நடுவில் வங்காளக்கடலைச் சார்ந்திருந்த ஒரு நாடாகும்'. அது வேங்கி நாட்டரசர்க்குட்பட்ட குறுநில மன்னர்களால் அக்காலத்தில் ஆட்சிபுரியப்பட்டு வந்தது. நம் குலோத்துங்கன் புதல்வனாகிய விக்கிரமசோழன் தன் தந்தையின் ஆணையின் படி வேங்கிநாட்டில் அரசப் பிரதிநிதியாய் அமர்ந்து ஆண்டு கொண்டிருந்த காலத்தில்', அவன் இளைஞனாயிருத்தலை ணர்ந்த தென் கலிங்க வேந்தன் வீமன் என்பான் தான்

யு

1. மறிபுனல் கலிங்க மண்டலங் கைப்படுத்தருளி-

S.I.I., Vol. III, No. 72; Ins. 304 of 1907 Ep. Car., Vol. X. Mulbagal42b.

2. Ins. 608 of M.E.R. for 1904-05, part 2 para 18.

3. Ancient Geography of India By A. Cunningham pp. 590-91.

4. விக்கிரமசோழன் வேங்கியில் அரசப் பிரதியாயிருந்த காலம் கி. பி. 1093 முதல் 1118 வரையில் எனலாம்.

5. தெலுங்கவீமன் விலங்கன் மிசையேறவும்

கலிங்கபூமியைக் கனலெரிபருகவும்

ஐயம்படைப்பருவத்து வெம்படை தாங்கி

வேங்கை மண்டலத் தாங்கினிதிருந்து

வடதிசை யடிப்படுத்தருளி - விக்கிரமசோழன் மெய்க்கீர்த்தி

இதில் ஐம்படைப் பருவம் என்பது விக்கிரமசோழன் இளமைப் பருவத்தை உணர்த்துமேயன்றி

அவன் குழந்தைப் பருவத்தைக் குறிக்காதென்றுணர்க.