உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

27

சுயேச்சைபெறும் பொருட்டுக் கலகஞ் செய்தான், அந் நிகழ்ச்சியை யறிந்த அரசிளங்குமரனாகிய விக்கிரமசோழன், வேங்கி நாட்டி லிருந்து பெரும்படையுடன் புறப்பட்டுச் சென்று தென்கலிங்க வீமனைப் போரில் வென்று, முன் போலவே தனக்குக் கப்பஞ் செலுத்தி வருமாறு செய்தான். எனவே, தென்கலிங்க வேந்தன் தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல், மீண்டும் வேங்கியின் அரசப் பிரதிநிதியாகிய விக்கிரம சோழனுக்கு அடங்கிய ஒரு சிற்றரசனாயினன். இச்செய்திகளை விக்கிரம சோழன் மெய்க்கீர்த்தியிலும் காணலாம்'.

இத்தென்கலிங்ப்போர் விக்கிரமசோழனால் நிகழ்த்தப் பெற்றதாயினும் குலோத்துங்கனது ஆட்சிக் காலத்தில் நடை பெற்றதாதலின் மகனது வெற்றி, தந்தைக் கேற்றியுரைக்கப் பட்டதென்றுணர்க.

இனி, விக்கிரசோழன் வென்ற அத்தென்கலிங்க வீமனைப் பாண்டிமன்னன் சடையவர்மன் பராந்தகன் என்பவனும் போரில் வென்றடக்கினான் என்று அவன் மெய்க்கீர்த்தி கூறுகின்றது. எனவே, ஒரே காலத்திலிருந்த இவ்விரு வேந்தரும் தென் கலிங்கத்தரசனைப் போரில் வென்றிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். நம் குலோத்துங்கனுக்குத் திறை செலுத்திக் கொண்டு பாண்டி நாட்டை ஆட்சி புரிந்து கொண்டிருந்த பராந்தக பாண்டியன் விக்கிரமசோழனுக்கு உதவி புரியும் பொருட்டுத் தென் கலிங்கப் போருக்குச் சென்றிருத்தலும் இயல்பேயாம். அதுபற்றியே பராந்தக பாண்டியன் மெய்க் கீர்த்தியும் இப்போர் நிகழ்ச்சியைக் கூறுகின்றது எனலாம்.

கி.பி.1099 இல் வரையப்பெற்ற குலோத்துங்கன் கல்வெட்டொன்று, விசாகப்பட்டினம் ஜில்லாவிலுள்ள சிம்மாசலத்தில்' காணப்படுகின்றது. அன்றியும், கோதாவரி

1.

தெலுங்கவீமன் குளங்கொண்டு தென்கலிங்க மடிப்படுத்து திசையனைத்து முடனாண்ட சிரீபராந்தக தேவர்க்கு.

Travancore Archaeological Series; Vol.I, No. 3.

2. இதில் குறிப்பிடப்பெற்ற குளம், கலிங்க நாட்டின் பழைய தலைநகராகிய ஸ்ரீகாகுளம் என்பதேயாம்.

3.S.I.I.,Vol. VI, No. 1144.