உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

ஜில்லாவிலுள்ள திராட்சாராமத்திலும் பிற இடங்களிலும் இவ்வேந்தன் கல்வெட்டுகள் உள்ளன'. அவைகள் எல்லாம், தென்கலிங்கம் இவன் ஆட்சிக்கு உட்பட்டுவிட்டது என்பதை நன்கு விளக்குவனவாகும்.

வடகலிங்கப்போர்

-

கி. பி. 1112 ஆம் ஆண்டில் நடைபெற்ற இப்போர், வடக்கே வடகலிங்க வேந்தனாகிய அனந்தவர்மன் என்பவ னோடு குலோத்துங்கன் நிகழ்த்தியதாகும். திருச்சிராப்பள்ளி ஜில்லா சீனிவாசநல்லூரில் இவனது ஆட்சியின் 42 - ஆம் ஆண்டில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டொன்றும் தஞ்சாவூர் ஜில்லா ஆலங்குடியில் இவனது ஆட்சியின் 45 - ஆம் ஆண்டில் வரையப்பெற்ற மற்றொரு கல்வெட்டும் இப்போர் நிகழ்ச்சியைச் சிறிது விளக்கிக் கூறுகின்றன. ஆனால் குலோத்துங்கன் மீது சயங்கொண்டார் என்னும் புலவரால் பாடப்பட்ட கலிங்கத்துப் பரணி என்ற நூல் இதனை விரிவாக உணர்த்துகின்றது. வட கலிங்கத்திற்கு நேரிற் சென்று இப்போரை நடத்திப் பெரு வெற்றியுடன் திரும்பியவன், இவனுடைய படைத் தலைவர்களுள் முதல்வனாகிய கருணாகரத் தொண்டைமான் என்பவனேயாம்". குலோத்துங்கனது ஆட்சியில் நடந்த போர்களுள் இதுவே இறுதியில் நடந்தது எனலாம். இப்போரைப் பற்றிக் கலிங்கத்துப் பரணி கூறும் செய்திகளை அடியிற் காண்க.

1. Ibid., Vol. IV; Nos. 1023, 1024, 1246 and 1285.

2.

குலோத்துங்கன் ஆட்சியின் 42 ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் சிலவற்றில் இப்போர் நிகழ்ச்சி காணப்படாமையால் இஃது அவ்வாண்டின் இறுதியில் நடைபெற்றதாதல் வேண்டும். எனவே கி. பி. 1112-ல் நிகழ்ந்தது என்பது தெள்ளிது.

3. Ins. 608 of 1904; M.E.R. for 1904-05, Part 2 Para 18.

4. S.I.I.,Vol. IV. No. 445.

5. கலிங்கப் போர்க்குச் சென்ற கருணாகரத் தொண்டை மானோடு வாணகோவரையன், முடிகொண்ட சோழன் என்ற இரண்டு படைத்தலைவர்களும் அங்குச் சென்றனர் என்று கலிங்கத்துப் பரணியிலுள்ள ஒரு தாழிசை கூறுகின்றது. அது, வாசிகொண்டரசர் வாரணங்கவர வாணகோவரையன் வாண்முகத்-தூசிகொண்டு முடிகொண்ட சோழனொரு சூழிவேழமிசை கொள்ளவே என்பது. இப்பாடல் திரு. அ. கோபாலையர் பதிப்பித்த கலிங்கத்துப் பரணியில் உளது. பிற பதிப்புகளில் காணப்படவில்லை, எனவே பழைய ஏட்டுப்பிரதி களில் இஃது உளதா என்று பார்த்துப் பிறகு உறுதி செய்தல் வேண்டும். அன்றியும், கருணாகரன் தமையன் ஒருவன் இப்போர்க்குச் சென்றான் என்று கூறுவது பொருந்தாது.