உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

31

வீரத்தையும் பாராட்டி மகிழ்ந்தமையோடு அவனுக்குத் தக்க வரிசைகளும் செய்தனுப்பினான்.

இனி, கலிங்க நாட்டில் நிகழ்ந்த இப்போர் நிகழ்ச்சியில் மட்டையன், மாதவன், எங்கராயன், ஏச்சணன், இராசணன், தாமயன், போத்தயன், கேத்தணன் என்ற தலைவர்கள் உயிர் துறந்தனர் என்று குலோத்துங்கன் மெய்க்கீர்த்தி உணர்த்து கின்றது. இவர்களுள் எங்கராயன் என்பான்' கலிங்க வேந்தனுடைய அமைச்சன் என்பது கலிங்கத்துப்பரணியால் அறியக்கிடக்கின்றது. தாமயன் என்பான் அவனுடைய தலைமைச் சேனாதிபதியாவன். இப்போர் நிகழ்ந்த காலத்தில் கலிங்க நாட்டில் அரசாண்டவன் அனந்தவர்மன் என்று கலிங்கத்துப் பரணி கூறுகின்றது”. அதன் கூற்றிற்கேற்ப, அனந்தவர்ம சோழகங்கன் என்னும்

வேந்தனொருவன் கி. பி. 1078 முதல் 1150 வரையில்அந்நாட்டில் ஆட்சிபுரிந்துள்ளனன் என்பது அங்குக் கிடைத்த செப்பேடு களால் அறியப்படுகின்றது. எனவே கலிங்கத்துப்பரணியில் காணப்படும் செய்திகள் செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் காணப்படும் செய்திகளோடு ஒத்திருந்தல் அறியற்பாலதாகும்.

இனி, கலிங்கப் போரில் தோல்வியுற்ற அனந்தவர்மன் என்பவன் நம் குலோத்துங்கனுடைய மகள் இராசசுந்தரியின் மகன் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அவ்வாறாயின், குலோத்துங்கன் தன் மகள் வயிற்றுப் பேரனைப் போரில் வென்றதை ஒரு பெருவெற்றியாகக் கருதி, இவ்வேற்தன் மீது கலிங்கத்துப்பரணி என்னும் இணையற்ற நூலைப் புலவர் பெருமானாகிய சயங்கொண்டார் இயற்றுவதற்கு முன்வந்திருப் பாரா என்ற ஐயம் உண்டாகின்றது. ஆகவே, அச்செய்தி மீண்டும்

1. S.I.I., Vol. IV No. 445.

2. க.பரணி, 11-தா 66.

3. அந்தரமொன் றறியாத வடகலிங்கர்

குலவேந்தன் அனந்த பன்மன்

வெந்தறுகண் வெகுளியினால் வெய்து யிர்த்துக்

கைபுடைத்து வியர்த்து நோக்கி

(க.ப. 11-தா. 63)

4. Annual Report on South Indian Epigraphy for 1935-36 pp. 63 and 64;

இவன் இளவரசுப்பட்டம் கி. பி. 1074ல் பெற்றவனாவன்.

5. The Colas, Vol. II. p. 37.