உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

நன்கு ஆராய்தற்குரியதொன்றா யிருத்தலின் இந்நிலையில் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

அதனை

கருணாகரத் தொண்டைமானது கலிங்க வெற்றியின் பயனாக அனந்தவர்மனது ஆட்சிக்காலம்' முழுவதும் கலிங்க நாடு சோழர்க்கு உட்பட்டிராவிட்டாலும், முற்பகுதியில் சில ஆண்டுகளாவது ன்னோர் ஆட்சிக்கு உட்பட்டிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. குண்டூர் ஜில்லாவிலுள்ள வேட்பூரில் காணப்படும் கல்வெட்டொன்று, கோடர்குல மன்னன் வீமன் என்பவன் கி. பி. 1108 - இல் கலிங்க வேந்தனைப் போரில் வென்று அவன் நாட்டை சோழர் ஆட்சிக்கு உட்படுத்தினானென்று கூறுகின்றது”. எனவே, குலோத்துங்கன் காலத்தில் நடைபெற்ற கலிங்கப் போர்களுள் ஏதேனும் ஒன்றில் அவன் சோழர்க்கு உதவியுரிந்திருத்தல் வேண்டும். கலிங்க நாட்டு அரசியல் அதிகாரிகளுக்குத் தமிழ்நாட்டுப் பட்டங்கள் வழங்கப் பட்டிருப்பதும், அந்நாட்டுக் கல்வெட்டுகளில் சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் போல் எதிராம் ஆண்டும் சௌர மாதமும்' குறிக்கப்பெற்றிருப்பதும் அந்நாடு சில ஆண்டு களாவது சோழர் ஆட்சியின் கீழ் இருந்திருத்தல் வேண்டும் என்பதைத் தெள்ளிதிற் புலப்படுத்துவனவாகும்.

குலோத்துங்கனும் ஈழநாடும்

குலோத்துங்கன் ஆட்சியில் சோழ இராச்சியம் பண்டைப் பெருமையில் சிறிதும் குறையாமல் உயர் நிலையில் இருந்து வந்ததெனினும் இலங்கையாகிய ஈழநாட்டை மாத்திரம் இவன் ஆட்சியின் தொடக்கத்திலேயே இழக்கும்படி நேர்ந்தது. இவனுக்கு முன் அரசாண்ட அதிராசேந்திரனே ஈழநாட்டை ஆட்சி புரிந்த இறுதிச் சோழ மன்னன் ஆவன். கி. பி. 1070-இல் வரையப்பெற்ற அவன் கல்வெட்டொன்று அந்நாட்டில் அனந்தவர்மன் 72 ஆண்டுகள் கலிங்கநாட்டில் அரசாண்டவன் என்று தெரிகிறது.

1.

2. Ins.567 of 1925.

3. ராயராய விழுப்பரையன், கலிங்க விழுப்பரையன், கங்கமார்த்தாண்ட பிரமமாராயன், கங்க வேளான் முதலான பட்டங்களும் புரவுவரி என்னும் உத்தியோகப் பெயரும் அந்நாட்டில் காணப்படு கின்றன. (Annual Report on South Indian Epigraphy for 1935-36, Page 63.) 4. சைத்திரம், வைசாகம் என்னும் சாந்திரமாதப் பெயர்கள் குறிப்பிடாமல் மேஷம் ரிஷபம் என்னும் சௌரமாதப் பெயர்கள் குறிக்கப்பட்டிருப்பது காண்க. (Ibid Part 2, para 16)