உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

33

பாலன்னருவா என்னுமிடத்தில் உளது'. அதுவே, சோழ மன்னனின் இறுதிக் கல்வெட்டென்றுங் கூறலாம். அவன் சோழநாட்டில் இறந்த பின்னர். அந்நாடு அரசனின்றிக் குழப்பத்திலிருந்த நிலை முன்னர் விளக்கப் பட்டுள்ளது. சுயேச்சை எய்தித் தம்நாட்டைத் தாமே ஆட்சிபுரிய வேண்டு மென்று பல ஆண்டுகளாக முயன்று வந்த சிங்களவர்கள் அதுவே தக்க காலமென்று கருதி, ரோகணத்திலிருந்த தங்கள் அரச குமாரனாகிய முதல் விசயபாகு என்பவனைக் கொணர்ந்து அனுராதபுரத்தில் கி. பி. 1073 இல் முடிசூட்டி ஈழநாடு முழுமைக்கும் அரசனாக்கினார்கள்'. அங்கிருந்த சோழரின் படைக்கும் சிங்களவேந்தனுக்கும் பெரும்போர் நிகழவே, அதில் அவ்வேந்தனே வெற்றி பெற்றனன். பிறகு சோழ நாட்டிலிருந்து சென்ற பெரும் படையொன்று அனுராதபுரத்தில் அவ்விசய பாகுவைத் தோற்றோடச் செய்தது. அந்நகரைச் சோணாட்டுப் படை கைப்பற்றிக்கொள்ளவே, விசயபாகு தக்க அரண் வாய்ந்த வேறோர் இடத்திற்குச் சென்று அங்கிருந்து சோழரை எதிர்த்துப் படை கைப்பற்றிக்கொள்ளவே, விசயபாகு தக்க அரண் வாய்ந்த வேறோர் இடத்திற்குச் சென்று அங்கிருந்து சோழரை எதிர்த்துப் போர் புரிதற்கு முயன்று கொண்டிருந்தான், அங்ஙனமே பொலன்னருவா, அனுராதபுரம் ஆகிய இரு நகரங்களிலும் சோழரைத் தாக்கிப் பொருதற்கு இருபெரும் படைகளை அனுப்பியமையோடு தானும் அவ்விடங்கட்கு வேறொரு வழியாகச் சென்றான். பொலன்னருவாவில் பெரும் போர் நிகழ்ந்த பின்னர், அந்நகரம்சிங்கள மன்னனால் கைப்பற்றப் பட்டது. மற்றொரு சிங்களப்படை கடும் போர் புரிந்து அனுராத புரத்தையும் கவர்ந்துகொண்டது. சோழர் படை தோல்வி யெய்தி திரும்பிவிடவே, விசயபாகு பெருமகிழ்வுற்று ஈழநாடு முழுமைக்கும் வேந்தனாயினன், பிறகு அந்நாட்டை அவ்வேந்தனே முடிமன்னனாக வீற்றிருந்து ஆட்சி புரிந்து வருவானாயினான். குலோத்துங்கன்

தன் ஆட்சியின்

1. S.I.I., Vol. IV, No. 1388.

எனவே,

தொடக்கத்திலேயே

2. இவன் ரோகணத்தில் கி. பி. 1058 முதல் 1073 வரையில் அரசாண்டான். பிறகு கி. பி. 1073 முதல் 1114 வரையில் இலங்கை முழுவதையும் ஆட்சி புரிந்தான்.(Epigraphia Zeylanica Vol. III, No.1)