உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

ஈழநாட்டை இழந்துவிட்டானென்று தெரிகிறது. ஈழநாட்டு நிகழ்ச்சிகள் குலோத்துங்கன் கல்வெட்டுக்களில் காணப்பட வில்லை. இவையனைத்தும் இலங்கைச் சரிதமாகிய மகாவம்சத்தால் அறியக் கிடப்பனவாகும். அன்றியும் குலோத்துங்கன் கல்வெட்டுக்கள் ஈழநாட்டில் காணப்படாமை யொன்றே, அந்நாடு இவன் ஆட்சிக்கு உட்படாமல் சுயேச்சை பெற்ற ஒரு தனியரசன் ஆளுகையின்கீழ் இருந்து வந்தது என்பதை நன்கு புலப்படுத்துவதாகும். குலோத்துங்கனும் கங்கபாடி நாடும்

காணப்படாமையால்

இனி, குலோத்துங்கன் தன் ஆட்சியின் இறுதிக்காலத்தில் கங்கபாடி நாட்டையும் இழந்துவிட்டனன் என்பது இவன் கல்வெட்டுக்கள் கி. பி. 1115 ஆம் ஆண்டிற்குப் பிறகு அந்நாட்டில் நன்கறியக்கிடக்கின்றது. போசள வேந்தனாகிய பிட்டிகவிஷ்ணு வர்த்தனன் என்பான் கி.பி. 1116 -இல் 'தலைக்காடு கொண்ட அரசன்' என்று தன்னைக் கூறிக்கொள்வது' கங்கபாடி நாட்டின் தலைநகராகிய தலைக் காட்டை அவன் சோழர்களிடத்திலிருந்து கைப்பற்றிவிட்டான் என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றது. அன்றியும், அதே ஆண்டில் அவன் தலைக்காடு, குவளாலபுரம் என்னும் நகரங்களி லிருந்து கங்கபாடி நாடு முழுவதையும் அரசாண்டான் என்பது அவன் கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. கொங்கு நாட்டில் தகடூரிலிருந்து அரசாண்ட அதிகமான் மரபினரே சோழரின் பிரதிநிதிகளாகக் கங்கபாடி நாட்டையும் ஆண்டு வந்தனர். போசள மன்னனின் தண்டநாயகனாகிய கங்கராசன் என்பவன் கி. பி. 1116 - இல் அவ்வதிகமானைப் போரில் வென்று கங்கபாடி நாட்டைக் கைப்பற்றித் தன் அரசனுக்கு அளித்தான் என்றும், தாமோதரன், நரசிம்மவர்மன் என்போர் அதிகமானுக்குப் போரில் உதவி புரிந்தனர் என்றும் அப்போரில் அன்னோர் தோல்வி யுற்றமையால் தமிழர் கங்கபாடி நாட்டினின்று துரத்தப் பட்டனர் என்றுஞ் சொல்லப்படுகின்றன. அவற்றையெல்லாம்

3

.

1. இவன் கி. பி. 1100 முதல் 1152 வரை ஹொய்சள நாட்டில் ஆண்டவன் (The Colas, Vol. II, page 42)

2. Ibid, p. 42.

3. The Colas, Vol. II, pp, 42 and 43.