உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

-

35

கூர்ந்து ஆராயுமிடத்து, நம் குலோத்துங்கன் தன் ஆட்சியின் 46 - ஆம் ஆண்டாகிய கி. பி. 1116 இல் முதல் இராசராசன் கால முதல் சோழர் ஆட்சிக்குட்பட்டிருந்த கங்கபாடி நாட்டை இழந்து விட்டான் என்பது நன்கு வெளியாகின்றது.

கு லோத்துங்கனும் வேங்கி நாடும்

இனி, குலோத்துங்கன் தந்தையின் நாடாகிய வேங்கிநாடு இவன் ஆட்சிக் காலத்தில் எத்தகைய நிலையில் இருந்தது என்பது ஆராயற்பாலதாகும். இவன் சிறிய தந்தையாகிய ஏழாம் விசயாதித்தன் என்பவன் கி. பி. 1007 வரையில் 15 ஆண்டுகள் வேங்கி நாட்டில் ஆட்சிபுரிந்து இறந்தான்'. கி. பி. 1070 - இல் ல் நம் குலோத்துங்கன் சோழ நாட்டிற்கு அரசனாகி அதனை ஆட்சிபுரிந்து கொண்டிருந்தமையால் தன் சிறிய தந்தை இறந்த பின்னர் வேங்கி நாட்டிற்குத் தானே நேரிற் சென்று அதன் ஆட்சியை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. எனினும், தன் தந்தை அரசாண்ட அந்நாடு பிறர் ஆட்சிக்குட்படாதவாறும் தான் ஆட்சிபுரிந்து கொண்டிருக்கும் சோழ இராச்சியத்திற்கு வடதிசையில் அஃது ஓர் அரணாக அமைந்திருக்குமாறும் தன் புதல்வர்களுள் ஒருவனாகிய இராசராச மும்முடிச் சோழன் என்பவனைத் தன் பிரதி நிதியாக அந்நாட்டிற்கனுப்பி அதனை அரசாண்டு வரும்படி தக்க ஏற்பாடு புரிந்தான். அவன் கி. பி. 1077 முதல் 1078 வரை ஓர் ஆண்டு அங்கு ஆட்சிபுரிந்து தன் தந்தைக்கு அணுக்கத்தொண்டு புரியவேண்டிச் சோழ நாட்டிற்குத் திரும்பி விட்டான்.

பிறகு, அவன் தம்பியாகிய வீரசோழன் என்பான் தன் தந்தை விரும்பியவாறு வேங்கிநாட்டிற்கு அரசப் பிரதிநிதியாகச் சென்று கி. பி. 1078 முதல் 1084 வரை அதனை ஆட்சி புரிந்தான்’. ஆறு ஆண்டுகட்குப் பின்னர். கி. பி. 1084 - இல் குலோத்துங்கன் அவனைச் சோணாட்டிற்கழைத்துத் தன்பால் வைத்துக் கொண்டு

1.S.I.I., Vol. I, page 60

2. Chellur plates of Virachoda, Verse 17.

3. Ibid. Verse 21.

(S.I.I., Vol. I, No. 39)