உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4 தன் முதற் புதல்வனாகிய இராசராச சோழகங்கன் என்பவனை வேங்கிநாட்டின் அரசப் பிரதிநிதியாக்கி, அந்நாட்டிற் கனுப்பினான். அவன் கி.பி. 1084 முதல் 1089 வரையில் ஐந்தாண்டுகள் அந்நாட்டில் தன் தந்தையின் பிரதிநிதியாக விருந்து அரசாண்டான். மீண்டும் கி. பி. 1089 - வீரசோழன் வேங்கிநாட்டிற்கு அரசப் பிரதிநிதியாக அனுப்பப்பெற்று', கி. பி. 1093 வரையில் அந்நாட்டிலிருந்து அதனை ஆட்சிபுரிந்தான். அக்காலத்தில் அவன் ஒரு பாண்டியனோடு வடபுலத்தில் போர்புரியும் படி நேர்ந்தது. அப்போர் நிகழ்ச்சியில் தனக்கு உதவிபுரிந்த வெலநாண்டி அரசகுமாரனாகிய இரண்டாம் வெதுரா என்பவனுக்குக் கிருஷ்ணை, கோதாவரி ஆகிய இரு பேராறுகளுக்கும் இடையிலுள்ள சிந்துயுக் மாந்தரதேசத்தை வழங்கினான் என்று தெரிகிறது. வீரசோழனோடு வடபுலத்தில் போர்புரிந்து தோல்யுவிற்ற அப்பாண்டியன் நுளம்பபாடிப் பாண்டியருள் ஒருவனாயிருத்தல் வேண்டுமென்பது ஒருதலை.

பிறகு, கி.பி.1093 -ஆம் ஆண்டில் குலோத்துங்கன் தன் மக்களுள் ஒருவனாகிய விக்கிரமசோழன் என்பவனை வேங்கி நாட்டிற்கு அரசப் பிரதிநிதியாக அனுப்பினான். அவன் கி.பி. 1118 வரையில் அந்நாட்டில் தன் தந்தையின் பிரதிநிதியாக விருந்து அரசாண்டான்". இவ்வாறு குலோதுங்கன் தன் புதல்வர் பலரையும் வேங்கிநாட்டிற்குத் தன் பிரதிநிதிகளாக அனுப்பியமைக்குக் காரணம் அவர்கள் எல்லோரும் அச்சிறப்பினைச் சமமாகப் பெறுதல் வேண்டும் என்னுங் கருத்துப்பற்றியே போலும். குலோத்துங்கன் சோணாட்டில் ஆட்சியை ஏற்ற பின்னர் மேலைச் சளுக்கிய வேந்தனாகிய ஆறாம் விக்கிரமாதித்தன் என்பான் கீழைச் சளுக்கிய நாடாகிய வேங்கிநாட்டைக் கைப்பற்றித் தன் ஆளுகைக் குட்படுத்த வேண்டுமென்ற எண்ணமுடையவனாக இருந்தனன். 1. Ep. Ind., Vol. V, No. 10, Verse 25; Ibid. Vol. VI, No. 35.

ங்க

2. Ibid. V, No. 10, Verse 26.

3. Ep. Ind., Vol. IV, pp. 36 and 50.

வீரசோழன் தன் பகைவனாகிய பாண்டியனைப் போரில் வென்ற வெதுரா என்னும் அரசகுமாரனுக்குத் தன் நாட்டில் பாதியை அளித்து விட்டான் என்று ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது, (Ep. Ind. Vol. IV, No. 4, Verses 32 and 33)

4. The Colas, Vol II, p. 32.