உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

37

விக்கிரம சோழன் அந்நாட்டில் அரசப் பிரதிநிதியாயிருந்தபோது அவனுக்குத் திறை செலுத்திக் கொண்டிருந்த தென் கலிங்க வேந்தனாகிய தெலுங்க வீமன் அவனோடு முரண்பட்டமையும், வடகலிங்க மன்னனாகிய அனந்தவர்மன் நம் குலோத்துங்கனுக்கு வழக்கம்போல் கப்பஞ் செலுத்தாமல் மாறுபட்டமையும், சளுக்கிய விக்கிரமாதித்தன் செய்த சூழ்ச்சிகளின் பயனாகவும் இருத்தல் கூடும். எனினும், அவன் சூழ்ச்சிகள் விக்கிரமசோழன் வேங்கிநாட்டில் அரசப் பிரதிநிதியாக இருக்கும் வரையில் சிறிதும் பயன்படவில்லை என்று கூறலாம். குலோத்துங்கன் தான் முதுமை எய்தியமை கருதித் தன் புதல்வனாகிய விக்கிரம சோழனை வேங்கி நாட்டிலிருந்து கி. பி. 1118ஆம் ஆண்டில் தன் தலைநகராகிய கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருவித்து இளவரசுப் பட்டங் கட்டினான்.

இனி, கோதாவரி ஜில்லாவில் பித்தாபுரத்திலுள்ள மல்லப்ப தேவன் கல்வெட்டொன்று' விக்கிரம சோழன் சோழ நாட்டுக்குத் ரும்பிய பின்னர் வேங்கி நாடு அரசனின்றிக் குழப்பத்துக்கு உள்ளாகி யிருந்தது என்று கூறுகின்றது. அவ்வூரிலுள்ள மற்றொரு கல்வெட்டு, வெலநாண்டுத் தலைவனாகிய முதலாங்

2

காண்கனுடைய புதல்வன் சோடன் என்பவனுக்குக் குலோத்துங்கன் வேங்கி நாட்டை அளித்தான் என்று உணர்த்து கின்றது. எனவே சோழ நாட்டிலிருந்து ஒரு பிரதிநிதியையும் அனுப்பாமல் தெலுங்கச் சோழர்களுள் ஒருவனுக்கு அந்நாட்டைக் கொடுத்து அரசாண்டு வருமாறு ஏற்பாடு செய்தனன் என்பது நன்கு புலனாகின்றது. வேங்கி நாட்டைத் தன் ஆட்சிக்குட்படுத்த வேண்டுமென்று கருதித் தக்க காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சளுக்கிய விக்கிரமாதித்தன் என்பான் அந்நாட்டில் விக்கிரம சோழன் இல்லாமையை அறிந்து அதனைக் கைப்பற்றி வெலநாண்டுத் தலைவர்களைத் தனக்குட்பட்ட குறுநில மன்னராக்கிவிட்டான். குலோத்துங்கன் ஆட்சியின் 49, 50 -ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் வேங்கி நாட்டில் காணப்படாமை யொன்றே இவ்வேந்தன் அதனைக்

1. Ep. Ind., Vol. IV. No. 33, Verses 23 and 24.

2. Ibid. No. 4, Verses 34 and 35.