உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4 வீரராசேந்திரனாக ருத்தல் வேண்டுமென்று துணிதற்கு இடமுளது.

1

இனி, நம் குலோத்துங்கனுக்குச் சோதரிகள் இருவர் இருந்தனர் என்பது சிதம்பரத்திலுள்ள இரு கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. அன்னோர் குந்தவை, மதுராந்தகி என்போர். அவர்கள் இருவரும் தில்லையம்பலவாணர்பால் பேரன்பு பூண்டு தொண்டு புரிந்தவர்கள் என்பது அக் கல்வெட்டுக்களால் தெரிகிறது. அவர்களுள், குந்தவை என்பாள் தில்லையம் பலவாணர் தண்ணீர் அமுது செய்தருள ஐம்பது கழஞ்சு நிறையுள்ள பொற்கலம் ஒன்று அளித்திருப்பதோடு கி.பி. 1114ஆம் ஆண்டில் அப்பெருமானது திருக்கோயில் முழுதும் பொன் வேய்ந்துமுள்ளனள்.' மற்றொரு தங்கையாகிய மதுராந்தகி என்பாள் கி. பி. 1116-ல் திருச்சிற்றம்பலமுடையார் நந்தவனத்திற்கும் சிவனடியார் உண்ணும் மடத்திற்கும் நிவந்த மாக இறையிலி நிலங்கள் வழங்கியுள்ளனள். அவர்களைப் பற்றிய பிற செய்திகள் இப்போது தெரியவில்லை.

இனி, நம் குலோத்துங்கனது ஆட்சிக் காலத்தில் அமைச்சர் களாகவும், படைத் தலைவர்களாகவும், பிற அரசியல் அதிகாரி 1. சில கல்வெட்டுக்களில் அனந்தவர்மன் வீரராசேந்திர சோழ கங்கன் என்ற பெயருடன் குறிக்கப்பட்டிருந்தது அவன் வீரராசேந்திர சோழனுடைய பெயரன் என்பதை வலியுறுத்துதல் காண்க. (Ep. Ind., Vol. XXIX, p. 46)

2. (1) 'ஸ்வஸ்திஸ்ரீ திருபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்க (2) சோழதேவர் திருத்தங்கையார் ராஜராஜன் குந்தவை யாழ்வார் (3) ஆளுடையார்க்கு தண்ணீர் அமுதுசெய்தருள இட்ட (மி) ண்டம் ஒ (4) ன்றினால் குடிநற்கல் நிறை மதுராந்தன் மாடையோடு ஒக்கும் (5) பொன் 50 ஐம்பதின் கழஞ்சு உ உ'

நானிலத்தை முழுதாண்ட சயதரற்கு நாற்பது

நாலா (மா) ண்டில்

மீனநிகழ் நாயிற்று வெள்ளிபெற்ற வுரோகணிநா

ளிடபப் போதாற்

றேனிலவு பொழிற்றில்லை நாயகர்தங் கோயிலெலாஞ்

செம்பொன் வேய்ந்தாள்

ஏனவருந் தொழுதேத்து மிராசராசன் குந்தவைபூ

விந்தை யாளே.

(Ep. Ind., Vol. V, Ins. No. 13c. p. 105.)

3. 'திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு நாற்பத்தாறாவது ராஜாதிராஜ வளநாட்டுத் தனியூர் பெரும்பற்றப் புலியூர் உடையார் திருச்சிற்றம்பல முடையார்க்கு திருநந்தவனப்புறமாகவும் ஸ்ரீ மாஹேஸ்வரர்க்குத் திருவமுது செய்ய மடப்புறம் நம்பெருமான் திருத்தங்கையார் மதுராந்தகியாழ்வார்.. கொண்ட நிலம்' - (S.I.I., Vol. IV. No.222)


.................1.0.