உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

57

களாகவும் அமர்ந்து அரசாங்கத்தை நன்கு நடத்தி வந்தவர்கள் பலராவர். இவ்வேந்தனது ஆட்சியின் பதினொன்றாம் ஆண்டாகிய

கி.

1

பி. 1081-ல் திருப்பனந்தாளில் வரையப் பெற்ற கல்வெட்டொன்றில் இவனுடைய உடன் கூட்டத்ததிகாரிகளுள் சற்றேறக்குறைய ஐம்பதின்மர் பெயர்கள் காணப்படுகின்றன. அன்றியும், இம்மன்னனது மற்றைக் கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்றுள்ள அரசியல் அதிகாரிகள் எத்துணையோ பலர் என்று கூறலாம். அன்னோருள் சிலர் வரலாற்றை ஈண்டுச் சுருக்கமாகக் குறிப்பது பொருத்த முடையதேயாம்.

(1) கருணாகரத் தொண்டைமான்

ம்

2

இவனது வரலாற்றைக் கலிங்கத்துப் பரணி யொன்றே சிறிது கூறுகின்றது. அந்நூல் இலதேல், தமிழகத்தில் அக் காலத்தே பெருவீரனாய்ப் பெரும் புகழுடன் நிலவிய ன் இத்தலைவனது பெயரே பின்னுள்ளோர் தெரிந்து கொள்ளாத வாறு மறைந்தொழிந்திருக்கும் என்பது திண்ணம். இவன் பல்லவர் குலத்தில் தோன்றியவன். இவனுடைய தந்தை சீரிளங்கோ என்பான். இவனது இயற்பெயர் திருவரங்கன் என்பது. இவன் திருமாலிடம் பெரிதும் ஈடுபாடுடையவன். இவன் அறிவாற்றல் களில் சிறந்து விளங்கியமையால் முதலில் நம் குலோத்துங் கனுடைய அரசியல் அதிகாரிகளுள் ஒருவனாகிப் பிறகு படிப் படியாக உயர்நிலையை எய்தி இறுதியில் இவ்வேந்தற்கு அமைச்சர் தலைவனாகவும் படைத் தலைவர்களுள் முதல்வனாகவும் ஆயினன். இவனே வடகலிங்கப் போருக்குத் தலைமை படைத் தலைவனாகச் சென்று போர் நடத்தி, அந்நாட்டு வேந்தனாகிய அனந்தவர்ம சோகங்கனை வென்று, குலோத்துங்க சோழர்க்கு வாகைமாலை சூட்டியவன். கவிச் சக்கரவர்த்தியாகிய சயங் கொண்டாரும் இவனை 'வண்டையர் அரசன் அரசர்கள் நாதன் மந்திரி - உலகு புகழ் கருணாகரன்3 எனவும், 'கலிங்கப் பரணி

1. Annual Report onn South Indian Epigraphy for the year ending 31st March 1932, part II, para 14.

2. Ep. Ind., Vol. XXII, No. 23.

3. க.பரணி, 11 - தா. 132.