உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

59

பிற்காலத்தில் வாண்டுவாஞ்சேரி என்று மருவி வழங்கி வருதல் அறியற்பாலதாகும்.

(2) அரையன் மதுராந்தகனான குலோத்துங்க சோழ கேரளராசன்

இவன், சோழ மண்டலத்தில் மண்ணி நாட்டிலுள்ள முழையூரிலிருந்தவன்; குலோத்துங்க சோழனுடைய படைத் தலைவர்களுள் ஒருவன்; இவ்வேந்தனால் கொடுக்கப்பெற்ற குலோத்துங்க சோழ கேரளராசன் என்னும் பட்டம் எய்தியவன்; குலோத்துங்கன் சேரர்களோடு நிகழ்த்திய போர்க்குப் படைக்குத் தலைமை வகித்துச் சென்ற வீரர்களுள் ஒப்பற்றவனாய் விளங்கியவன்; இவ்வரசனால் சேரமண்டலத்தில் கோட்டாற்றில் நிறுவப்பெற்ற நிலைப்படைக்குத் தலைவனாயிருந்தவன். இவன் கோட்டாற்றில் தங்கியிருந்த நாட்களில் அங்கு இராசேந்திர சோழேச்சுரம் என்னும் கோயிலொன்று எடுப்பித்துள்ளனன். ஆந்தாயக்குடி என்னும் ஊர் இராசேந்திர சோழநல்லூர்' என்று பெயர் மாற்றப்பெற்றுத் தேவதான இறையிலியாக குலோத்துங்க சோழனால் அக் கோயிலுக்களிக்கப்பட்டுள்ளது. இப்படைத் தலைவன் சிவபத்திச் செல்வம் வாய்க்கப்பெற்றவன் என்பது இவன் வென்ற நாட்டில் சிவாலயம் எடுப்பித்தமையால் நன்கறியக் கிடக்கின்றது.

(3) அரும்பாக் கிழான் மணவிற் கூத்தனான காலிங்கராயன்

இவன் தொண்டைமண்டலத்திலுள்ள இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றாகிய மணவிற் கோட்டத்து மணவில் என்னும் ஊரினன். அருளாகரன், அருப்பாக்கிழான், பொன்னம் பலக் கூத்தன், நரலோக வீரன் முதலான பெயர்களையுடையவன். குலோத்துங்க சோழன் ஆட்சிக்காலத்தில் படைத் தலைவனாக யமர்ந்து பெரும் புகழெய்தியவன். குலோத்துங்கன் வேணாநாடு, மலைநாடு, பாண்டிநாடு, வடநாடு முதலியவற்றோடு நிகழ்த்திய போர்களில் படைத் தலைமை வகித்து, வெற்றி பெற்று, அதனால் தன் வேந்தனுக்கு என்றும் அழியாத புகழை உண்டு பண்ணியவன். வனது பேராற்றலை நன்குணர்ந்த குலோத்துங்கன் இவனுக்குக்

1. S.I.I., Vol. III, No. 73.