உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




68

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

காமதேவ சோட மகாராசன் என்பான்.

வன் குலோத்

துங்கனுக்குக் கப்பஞ் செலுத்திக்கொண்டிருந்த ஒரு குறுநில மன்னன் என்பது கர்னூல் ஜில்லாவில் திரிபுராந்தகத்திலுள்ள ரு கல்வெட்டுக்களால் புலனாகின்றது.'

(8) மகா மண்டலேசுவரன் சூரப்ப ராஜன்

.

இவன் ஆந்திர நாட்டில் வீரகொட்டாவிலிருந்த ஒரு சிற்றரசன். இவன் தன்னைப் பாரத்துவாச கோத்திரத்தினன் என்றும் கட்டுவாங்க கேகதனன் என்றும் ரிஷப லாஞ்சனன் என்றும் காஞ்சீபுரேசுவரன் என்றும் கூறிக்கொள்வதால், பல்லவர் மரபினனான யிருத்தல் வேண்டுமென்பது நன்கு வெளியாகின்றது. எனவே, இவன் குலோத்துங்கனுக்குத் திறை செலுத்திக் கொண்டு தெலுங்கு நாட்டின் ஒரு பகுதியில் அரசாண்ட பல்லவர் குலத் தலைவனாதல் வேண்டும். கோதாவரி ஜில்லாவில் திராட்சாராமத்திலுள்ள கல்வெட்டொன்று இவன் குலோத்துங்கனுக்குக் கீழ்ப்பட்ட ஒரு குறுநில மன்னன் என்று உணர்த்துகின்றது.

இனி, தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள திருவயீந்திரபுரத் திருமால் கோயிலுக்குப் பிள்ளையார் விஷ்ணுவர்த்தன தேவன் வேண்டிக்கொண்டவாறு குலோத்துங்க சோழன் இறையிலி நிலங்கள் வழங்கிய செய்தி, அவ்வூரிலுள்ள ஒரு கல்வெட்டினால்3 புலப்படுகின்றது. இவ்விஷ்ணுவர்த்தனன் யாவன் என்பது தெரியவில்லை. விஷ்ணுவர்த்தனன் என்னும் பெயருடைய அரசர்கள் கீழைச் சளுக்கிய நாடாகிய வேங்கி நாட்டில் ஆட்சி புரிந்துள்ளனர். நம் குலோத்துங்க சோழனோ வேங்கி நாட்டில் சப்தம விஷ்ணுவர்த்தனன் என்று வழங்கப் பெற்றனன் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. எனவே, வேங்கி நாட்டில் அரசப் பிரதிநிதியாகவிருந்து ஆட்சி புரிந்த குலோத்துங்கன் புதல்வர்களுள் ஒருவனே திருவயீந்திர புரக்கல்வெட்டில் குறிப்பிடப்பெற்ற விஷ்ணுவர்த்தனதேவன் ஆதல் வேண்டும்.

1. Ins. Nos. 262 and 263 of 1905.

2. Ins. 405 of 1893; S.I.I., Vol. IV, No. 1327.

3. S.I.I., Vol. VII, No. 760.