உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 6

அதற்கு முன்னரே அஃது அழிந்திருத்தல் வேண்டும் என்றும் ஐயமின்றிக் கூறலாம். எனவே, கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் அச் சங்கம் முடிவெய்தியிருத்தல் வேண்டும் என்பது நன்கு வலியுறுதல் காண்க.

இனி, கடைச்சங்கத்தின் இறுதிக்காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டாகும் என்று சில ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.1 அன்னோர் கொள்கை பொருந்துமா என்பது ஈண்டு ஆராய்தற் குரியதாகும். அவர்கள் தாம் கண்ட முடிபிற்கு இரண்டு ஆதாரங்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். அவற்றுள் ஒன்று கங்கைக்கரையி லுள்ள பாடலிபுரம் என்னும் மாநகர் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் வெள்ளப்பெருக்கால் அழிவுற்ற செய்தியைக் கடைச்சங்கப் புலவருள் ஒருவராகிய மாமூலனார் என்பார்,

பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை

நீர்முதல் கரந்த நிதியங் கொல்லோ

(அகம்.265)

என்ற அகநானூற்றுப் பாடலில் குறிப்பிட்டுள்ளனர் என்பது; பிறிதொன்று, சமுத்திரகுப்தன் என்பான் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் மீது படையெடுத்த நிகழ்ச்சியை அப்புலவர் பெருமானே,

9

முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர் தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு

விண்ணுற வோங்கிய பனியிருங் குன்றத் தொண்கதிர் திகிரி யுருளிய குறைத்த அறையிறந் தவரொ சென்றனர்

(அகம்.281)

என்ற மற்றோர் அகநானூற்றுப் பாடலில் கூறியுள்ளனர் என்பது. கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த இவ்விரு நிகழ்ச்சிகளையும் தம் பாடல்களில் குறித்துள்ள மாமூலனார் நிலவிய கடைச்

1.

திருவாளர் ராவ்சாகிப் மு. இராகவையங்கார் அவர்கள் எழுதிய சேரன் செங்குட்டுவன் என்ற நூலில் செங்குட்டுவன் காலம் என்பதைப் பார்க்க.

2. சமுத்திரகுப்தனது தென்னாட்டுப் படையெழுச்சி கி. பி. நான்காம் நூற்றாண்டின் இடையில் நிகழ்ந்தது என்பது சரித்திர ஆசிரியர்களின் கருத்து.