உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 6 காலம் பற்றி அத்தகைய பிழைபாடு நேர்ந்தது எனலாம். குப்தர் காலத்திற்கு ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவர் மோரியர் என்பது வரலாற்றாராய்ச்சியாளர் யாவரும் அறிந்த தொன்றாம். குப்தர் என்னும் பெயரே கடைச்சங்க நூல்களில் யாண்டுங் காணப்படாமை குறிப்பிடத்தக்கது. ஆகவே, கடைச் சங்க காலத்திற்கு அவர்கள் காட்டியுள்ள பிறிதோர் ஆதாரமும் தவறாகப்போயினமை அறியற்பாலது. எனவே, கடைச்சங்க காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டெனக் கூறுவது எவ்வாற்றானும் பொருந்தாமை காண்க.

இனி, கடைச்சங்க காலம் கி. பி. எட்டாம் நூற்றாண் டென்பர் ஒரு சிலர்.2 அன்னோர் தம் கொள்கைக்கு ஆதாரமாக எடுத்துக்காட்டுவன, சிலப்பதிகாரத்தில் இரண்டு இடங்களில் காணப்படும் காலக்குறிப்புக்களும் அவற்றுள், ஒன்றிற்கு அடியார்க்கு நல்லார் எழுதியுள்ள உரைக்குறிப்புமே யாம்.

அவை,

வான்கண் விழியா வைகறை யாமத்து மீன்றிகழ் விசும்பின் வெண்மதி நீங்கக் காரிரு ணின்ற கடைநாட் கங்குல்

ஆடித் திங்கட் பேரிருட் பக்கத்

(சிலப். நாடுகாண்.1-3)

தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று

66

வெள்ளி வாரத் தொள்ளெரி யுண்ண

வுரைசான் மதுரையோ டரசுகே டுறுமெனு முரையு முண்டே நிரைதொடி யோயே

(சிலப். கட்டுரை.133-7)

'அந்தச் சித்திரைத் திங்கட் புகுதிநாள்- சோதி; திதி- மூன்றாம் பக்கம், வாரம்-ஞாயிறு. இத்திங்கள் இருபத்தெட்டிற்

1. மோரியச் என்பார், கி. மு. 322 -க்கும் கி. மு. 185 -க்கும் இடையில் ஆட்சிபுரிந்தோர் ஆவர். குப்தர்களோ கி. பி. 320 முதல் கி. பி. 455 வரையில் அரசாண்டவர்கள். (The Early History of India by Vincent A. Smith, pp. 206, 207, and 295.) 660 6621 குப்தர்க்கு ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டவர் மோரியர் என்பது தெள்ளிது.

2.

An Indian Ephemeris, Vol. I, part 1, pp. 459 - 468.