உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் இலக்கிய வரலாறு

13

சித்திரையும் பூரணையுங் கூடிய சனிவாரத்திற் கொடியேற்றி ‘நாலேழ் நாளினும்' என்பதனான் இருபத்தெட்டு நாளும் விழா நடந்து கொடியிறக்கி வைகாசி இருபத்தெட்டினிற் பூருவ பக்கத்தின் பதின்மூன்றாம் பக்கமும் சோமவாரமும் பெற்ற அனுடத்தில் நாட்கடலாடி ஊடுதலின் வைகாசி இருபத் தொன்பதிற் செவ்வாய்க்கிழமையும் கேட்டையும் பெற்ற நாச யோகத்து நிறைமதிப் பதினாலாம் பக்கத்து வைகறைப் பொழுதினிடத்து நிலவுபட்ட அந்தரத்திருளிலே யென்றவாறு, அது பூருவப்பக்கமென்பது தோன்றக் 'காரிருணின்ற கடை நாட்கங்கு' லென்றார்" என்பனவாம். இவற்றில் காணப்படும் சோதிடக்குறிப்புக்களைக் கணித்துப் பார்த்த காலஞ்சென்ற திரு. எஸ். டி. சாமிகண்ணுப் பிள்ளை அவர்கள் மதுரைமாநகர் எரியுண்டது கி. பி. 756-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 23-ஆம் நாளாகும் என்றும், ஆகவே, கடைச்சங்க காலமும் அதுவே யாதல் வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவ்வறிஞரே அடியார்க்கு நல்லார் உரையில் காணப்படும் சோதிடக் குறிப்புக்கள் சிறிது தவறுடையன என்பர். எனவே, தவறாகவுள்ள குறிப்புக்களின் துணைகொண்டு கணிக்கப் பெறும் காலமும் தவறுடைய தேயாம் என்பது திண்ணம். அவ்வுரைக் குறிப்புகளைக் கொண்டு கடைச்சங்க காலத்தை ஆராய்ந்த திரு.கே.ஜி. சங்கரையர் என்ற அறிஞர், கி. பி. முதல் ஆண்டு முதலாக ஆயிரத்து நானூறாம் ஆண்டு வரையில் ஓராண்டாவது அவற்றோடு முழுவதும் பொருந்திவரவில்லை என்றும், ஆகவே அடியார்க்கு நல்லார் உரையிற் காணப்படும் சோதிடக் குறிப்புக்கள் தவறுடையன வேயாம் என்றும், அவற்றின் துணைகொண்டு திரு. எல். டி. சாமிக்கண்ணுப் பிள்ளை அவர்கள் ஆராய்ந்து கண்ட முடிவு ஒப்புக்கொள்ளத் தக்கதன்று என்றும் மிக விரிவாக ஆராய்ந் தெழுதியிருப்பது’ ஈண்டுக் குறிப்பிடுதற்குரியதாகும்.

இனி, சைவ சமய குரவருள் ஒருவராகிய அப்பரடிகள் தம்முடைய பாண்டி நாட்டுத் திருப்புத்தூர்ப் பதிகத்தில்

1. An Indian Ephemeris by Diwan Bahadur L. D. Swamikannu Pillai, Vol. I, part I, pp. 459 - 468.

2. செந்தமிழ்த் தொகுதி 15.