உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 6

$2

'நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக் கருளினோன் காண்" என்று கடைச்சங்க கால நிகழ்ச்சி யொன்றைக் கூறியுள்ளனர். அன்றியும், அவ்வடிகள் காலத்தில் நிலவியவரும் சமயகுரவருள் முதல்வருமாகிய திருஞானசம்பந்த சுவாமிகள் தம் திருப்பாசுரத்தில் "அந்தண்மதுரைத் தொகை யாக்கினானும். .... பெற்றொன்றுயர்த்த பெருமான் என்று மதுரையம்பதியிலிருந்த கடைச்சங்கத்தைக் குறித்துள்ளார். இப்பெரியார் இருவரும் கி.பி. எழாம் நூற்றாண்டின் முதல் இடைப்பகுதிகளில் நம் தமிழகத்தில் விளங்கியர்கள் என்பது வரலாற்றாராய்ச்சியாளர்களால் ஐயமின்றித் துணியப் பட்ட செய்தியாகும். எனவே, கடைச்சங்க காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாதல் வேண்டும். ஆகவே, அச்சங்க காலம் கி. பி. எட்டாம் நூற்றாண்டென்பார் கூற்றுச் சிறிதும் பொருந்தாமை காண்க.

3

இதுகாறும் ஆராய்ந்தவாற்றால் கடைச்சங்க காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டெனவும், கி.பி. எட்டாம் நூற்றாண் டெனவும் கூறுவோர் கொள்கைகள் தக்க ஆதாரங்களின்றித் துணியப்பெற்றவை என்பது நன்கு தெளியப்படும். ஆகவே, முதலில் ஆராய்ந்து கண்டவாறு, மதுரைமா நகரில் நிலை பெற்றிருந்த கடைச்சங்கம், கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் முதற் பகுதியில்தான் அழிவெய்தியிருத்தல் வேண்டும் என்பது பல்வகையாலும் உறுதிபெற்று நிற்றல் உணரற்பாலதாம். கடைச்சங்க வீழ்ச்சிக்குக் காரணம்

மதுரை மாநகரில் நடைபெற்றுவந்த கடைச்சங்கம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் அழிவுற்றமைக்குக் காரணம் யாது என்பது ஈண்டு ஆராயற்பாலதாகும். பாண்டி நாட்டில் பெரும் பஞ்சம் ஒன்று தோன்றிப் பன்னிருயாண்டு மக்களைத் துன்புறுத்தியது எனவும், அக்கொடிய காலத்தில் பாண்டி வேந்தன் சங்கப் புலவர்களைப் பாதுகாத்தற்கிய

1. திருப்புத்தூர்த் திருத்தாண்டகம், பா. 3.

2. திருப்பாசுரம், பா. 11.

3. Tamilian Antiquary, No. 3. Date of Gnana Sambandar.