உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் இலக்கிய வரலாறு

1

19

என்பது வரலாற்றாராய்ச்சியாளர் யாவரும் அறிந்ததோர் உண்மையாகும். அதனை உலகிலுள்ள பல நாடுகளின் வரலாறு களும் உறுதிப்படுத்தி நிற்றல் உணரத்தக்கது. எனவே, ஏதிலார் படையெழுச்சியொன்றால் பாண்டி நாட்டில் அத்தகைய நிலையொன்று ஏற்பட்டு, அதனால் மதுரையிலிருந்த கடைச் சங்கமும் அழிவெய்தியிருத்தல் வேண்டும் என்பது தேற்றம். அதற்கேற்ப, பிறமொழியாளரான களப்பிரர் என்பார், பாண்டி நாட்டின்மேல் படையெடுத்துவந்து, அதனைத் தொன்று தொட்டு ஆட்சிபுரிந்துவந்த தமிழ் வேந்தர்களான பாண்டியரைப் போரில் வென்று அவர்கள் நாட்டையும் கைப்பற்றி அரசாண்டனர் என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன. அன்னோர் ஆட்சியில், பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி முன் செய்திருந்த அறச்செயல் அழிக்கப்பட்டுப் போயிற்று என்றும் அச் செப்பேடுகள் அறிவிக் கின்றன. ஆகவே, களப்பிரர் படையெழுச்சியும் ஆட்சியும் பாண்டி நாட்டில் எத்துணையோ மாறுதலையும் புரட்சியையும் உண்டுபண்ணித் தமிழ்மொழி, தமிழ்க்கலை, தமிழர் நாகரிகம் ஆகியவற்றை வீழ்ச்சியுறச் செய்துவிட்டன என்பது அச் செப்பேடுகளால் நன்கறியக் கிடக்கின்றது. எனவே, கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த களப்பிரர் படையெழுச்சியினால்தான் மதுரைமாநகரில் நிலவிய கடைச் சங்கம் அழிவுற்றது என்பது ஐயமின்றித் துணியப்படும்.

கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தின் அரசாங்க நிலையில் ஏற்பட்ட மாறுதல்கள்

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகமானது அதற்கு முன்னர் என்றும் கண்டறியாத துன்ப நிலையை எய்துவ தாயிற்று. இப் பெருநிலப்பரப்பானது முதல் முதல் பிற மொழி யாளராகிய அயலாரது ஆட்சிக்குள்ளாகித் தன் சீருஞ் சிறப்பும் இழந்த காலம் இதுவே எனலாம். இக்காலப் பகுதியில் தமிழ் நாடு ஏதிலாரது புதிய அரசியல்முறைக்கு உட்பட்டதோடு தனக்குரிய கலை நாகரிகங்களையும் பிற சிறந்த பண்பு 1. Eigraphia Indica, Vol. XVII, No. 16.