உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 6

1

களையும் இழந்து விடும்படி நேர்ந்தமையும் குறிப்பிடத் தக்கதாம். தமிழகத்தின் தென்பகுதியாகிய பாண்டிநாடு கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டியர் ஆட்சியை இழந்து களப்பிரர் ஆளுகைக்கு உட்பட்ட செய்தி முன்னர் விளக்கப்பட்டது. அங்ஙனமே, தமிழகத்தின் வடபகுதியாகிய தொண்டை நாடும் நடு நாடும் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடையில் பல்லவர் ஆட்சிக்குள்ளாயின. நடு நாட்டிற்கும் பாண்டி நாட்டிற்கும் இடையிலுள்ள சோழ நாடும் களப்பிரர் ஆளுகைக்கு உட்பட்டதாயிற்று. ஆகவே, இக்காலப் பகுதியில் தமிழ்நாடு முழுவதும் வேற்றரசர் இருவரது ஆட்சிக்குள்ளாகி விட்டமை தெள்ளிது. அவ்விருவரும் தமிழ்மொழியைத் தம் தாய் மொழியாகக் கொண்டவரல்லர். அவர்களது ஆட்சிக் காலத்தில் பிராகிருதமே அரசாங்க மொழியாக அமைந் திருந்தது. களப்பிரர் ஆட்சியில் பாலி மொழியும் அரசாங்கத்தின் பேராதரவிற்குரிய தாயிருந்தமை அறியத்தக்கது. ஆகவே, கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட ஏதிலார் ஆட்சி, தமிழ் மக்களின் வீழ்ச்சிக்கு எத்துணையோ வகைகளில்

அடிகோலியது எனலாம். எனவே, கி. பி. மூன்றாம்

நூற்றாண்டின் இடைப்பகுதி முதல் கி. பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் நடை பெற்ற அயலார் ஆட்சியில் தமிழ் மொழி போற்றுவாரற்றுத் தன் வளர்ச்சியும் பெருமையும் இழந்து தாழ்ந்த நிலையை எய்தியிருத்மை உணரற்பாலதாகும். அயலார் ஆட்சியில் பிற மொழிகளும் புறச்சமயங்களும் பெருமை யெய்தி வளர்ச்சியுற்றமை

கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தமிழகத்தின் வடபகுதிகளாகிய தொண்டை நாட்டையும் நடுநாட்டையும் பல்லவர்கள் கைப்பற்றி அரசாண்டு வந்தமை முன்னர் விளக்கப்பட்டது. அவர்களுடைய செப்பேடுகள் முதற்காலப் பகுதியில் பிராகிருத மொழியிலும், இடைக்காலப்

2

1. The Pallavas by G. J. Dubreuil, p. 10; Administration and Social Life under the Pallavas by Dr. C. Minakshi, p. 6.

2. Eigraphia Indica, Vol. I, No. 1.

Ibid, Vol. VI, No. 8; Ibid, Vol. VIII, No. 12.