உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

ம்

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 6 கடிகாசலம், புதுச்சேரியைச் சார்ந்த வாகூர் ஆகிய ஊர்களில் வட மொழிக்கல்லூரிகள் இருந்தன என்பது நந்திவர்மப் பல்லவ மல்லனது திருவல்லத்துக் கல்வெட்டினாலும் நிருபதுங்க வர்மனுடய பாகூர்ச் செப்பேடுகளாலும் நன்கறியப்படுகின்றது. அக்கல்லூரிகள், வடமொழி வளர்ச்சி கருதி நான்கு ஐந்தாம் நூற்றாண்டுகளிலேயே இடைக்காலப் பல்லவ மன்னர்களால் அமைக்கபெற்றிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அவற்றில் வடமொழியிலுள்ள பல கலைகளும் சிறந்த ஆசிரியர்களால் மாணவர்கட்குக் கற்பிக்கப்பட்டு வந்தமையோடு அன்னோர்க்கு உணவும் உடையும் உறையுளும் பிறவும் இலவசமாகக் கொடுக்கப் பெற்றுவந்தமையுங் குறிப்பிடத்தக்கதாகும். வாகூர்க் கல்லூரியில்

2

மொழியிலுள்ள பதினான்கு வித்தைகள் கற்பிக்கப்பட்டு வந்தன என்பதும் அக்கலைக்கூடத்தின் ஆண்டுச் செலவிற்காக அந்நாட்டில் மூன்றூர்கள் இறையிலியாக வழங்கப்பட்டுள்ளன என்பதும் பாகூர்ச் செப்பேடுகளால் தெள்ளிதிற் புலப்படு கின்றன. பல நூற்றாண்டுகள் தமிழ்ச் சங்கம் நிலை பெற்றிருந்ததும் பாண்டி வேந்தர்களின் தலைநகராக விளங்கியது மாகிய மதுரையம்பதியைச் சிறிதும் அறிந்துகொள்ளாத வட நாட்டு மக்கள், காஞ்சிமா நகரை மாத்திரம் நன்கு அறிந் துள்ளமைக்கும் அதனைப் பரத கண்டத்திலுள்ள ஏழு புண்ணிய நகரங்களுள்' ஒன்றாக ஏற்றுக்கொண்டு பாராட்டி யுள்ளமைக்கும் காரணம், அந்நகரில் பல்லவ அரசர்கள் அமைத்திருந்த வடமொழிக் கல்லூரியின் பெருமையும் சிறப்பும் அக்காலத்தில் வடபுலம் முழுவதும் பரவியிருந்தமையேயாகும். வடமொழிப் புலவராகிய காளிதாசர் என்பார் நகரங்களுள் சிறந்தது காஞ்சி என்று கூறியிருப்பதும் முற்காலத்தில் அந்நகரில் நடை பெற்றுவந்த வடமொழிக் கல்லூரியின் சிறப்புப் பற்றியே யாம் என்பது ஈண்டுணரற்பாலது. வைதிகர், சைவர், வைணவர், சமணர், பௌத்தர் ஆகிய பல்வகைச் சமயத்தினரும் காஞ்சிமா 1. Ibid, pp. 197 - 199.

2. Epigraphia Indica, Vol. XVIII, No. 2.

3. பரத கண்டத்தில் புண்ணிய நகரங்களாகக் கருதப்பட்ட ஏழனுள் காஞ்சியைத் தவிர மற்ற ஆறும் வடநாட்டூர்கள் என்பது உணரற்பாலது.

4. Dr. Krishnaswami Aiyangar Commemoration Vol. pp. 306 - 307.