உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் இலக்கிய வரலாறு

1

25

புத்த தத்தன் என்பவன் இருமுறை ஈழநாட்டிற்குச் சென்று, பௌத்த சமய நூல்களை நன்கு பயின்று, பிறகு சோழ நாட்டிற்குத் திரும்பிவந்து, அபிதம்மாவதாரம், விநயவிநிச்சயம் என்ற இரு நூல்களையும் பாலி மொழியில் எழுதி வெளி யிட்டுள்ளனன். அவற்றுள், அபிதம்மாவதாரம் என்ற நூலை, அரண்மனைகளும் பூஞ்சோலைகளும் செல்வம் நிறைந்த வணிகர்களும் உள்ள காவிரிப்பூம்பட்டினத்தில் கணதாசனால் அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய பௌத்தப் பள்ளியில் தான் தங்கியிருந்த காலத்தில் சுமதி என்ற மாணவன் வேண்டிக் கொண்டவாறு எழுதிமுடித்த செய்தியை அதன் இறுதியில் புத்த தத்தன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.' அன்றியும், சோழ நாட்டில் காவிரியால் வளம் பெற்ற பூத மங்கலம் என்ற நகரில் வெணுதாசன் என்பவனது சிறந்த பள்ளியில்தான் இருந்த நாட்களில் எளிதில் தம் மாணவர்களும் பெளத்த பிட்சுக்களும் சுருங்கிய காலத்தில் கற்றுணருமாறு விநயவிநிச்சயம் என்னும் நூல் இயற்றப்பெற்றது என்றும், அது களப்பிரகுல வேந்தனாக அச்சுத விக்கந்தன் என்பவன் தமிழ் நாட்டில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த போது தொடங்கி எழுதி முடிக்கப்பெற்றது என்றும் அந்நூலின் இறுதியில் அவ்வாசிரியன் குறித்திருப்பது அறியற்பாலதாகும். இவற்றால் சோழ நாடு களப்பிரர் ஆட்சிக் குட்பட்டிருந்த உண்மையும் அவர்களது ஆளுகையில் பௌத்த சமயமும் பாலி மொழியும் ஆதரிக்கபெற்று அவை எங்கும் பரவிய செய்தியும் நன்கு புலப்படுதல் காண்க. தமிழ் நாட்டில் அக் காலத்தில் நிலவிய பெளத்த சமயகுரவர் பதின்மர் பல்வகை நூல்கள் எழுதியுள்ளனர் என்றும் காஞ்சி மாநகர் ஒன்றில் மாத்திரம் வேறு பௌத்த ஆசிரியர் இருபதின்மர் பாலி மொழியில் பல பௌத்த சமய நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள் என்றும் கந்தவம்சம் என்ற பௌத்த நூலொன்று கூறுகின்றது.4 அன்றியும், பாலி மொழிக்கு முதலில் இலக்கணம் வரைந்த காச்சாயனரும் 1. Dr. Krishnaswami Aiyangar Commemoration Vol. pp. 242 -244.

3

2. Ibid, p. 243; The Colas, Vol. I. p. 119.

History of the Tamils, Mr. P. T. Srinivasa Aiyangar, pp. 528 -529.

3. Ibid, pp. 529 - 530.

4. Dr. S. Krishnaswami Aiyangar Commemoration Vol. p. 244.