உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் இலக்கிய வரலாறு

29

முனிவர்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களை நன்கு பயின்று சிறந்த புலமை எய்தித் தமிழ் நூல்கள் இயற்றும் ஆற்றலும் பெற்றனர்; பிறகு தமிழ் மொழியில் நூல்கள் இயற்றி, அவற்றின் மூலமாகத் தம் சமயக்கொள்கைகளைத் தமிழ்நாட்டில் யாண்டும் பரப்ப முயன்றனர். அதற்கு உறுதுணையாக, கடைச்சங்கம் நிலவிய பாண்டிநாட்டு மதுரையம்பதியில் பூஜ்யபாதருடைய மாணாக்கர் வச்சிரநந்தி என்ற சமண முனிவர் ஒருவர் கி. பி. 470ஆம் ஆண்டில் திராவிட சங்கம் ஒன்று நிறுவினர். இச் செய்தி, திகம்பர தரிசன சாரம் என்னும் சைன நூலொன்றால் நன்குணரக் கிடக்கின்றது.' அத்திராவிட சங்கம், சமணரது தமிழ்ச் சங்கமேயாகும். அது தமிழ்நாட்டில் அவர்கள் அமைத்த பிற சைன சங்கங்களுக் கெல்லாம் தலைமைச் சங்கமாக இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அந்நாட்களில் தமிழ்ச் சான்றோர் எழுதிய நீதிநூல்களைத் தமிழ் மக்கள் பெரிதும் விரும்பிப் படித்து வந்தமையறிந்த அச் சங்கத்தார் முதலில் தாமும் தமிழ்மொழியில் நீதிநூல்கள் இயற்றுவாராயினர். பழமொழி, சிறுபஞ்சமூலம், ஏலாதி என்பவை, அப்போது தோன்றிய நூல்களேயாம். அவை நீதிநூல்களாகக் கருதப்பட்டு வரினும் அவற்றில் எல்லாச் சமயங்கட்கும் ஏற்ற பொது நீதிகளோடு இடையிடையே சைனசமயக் கொள்கைகளும் ஒழுக்கங்களும் கூறப்பட்டிருத் தலைக் கற்றோர் யாவரும் காணலாம்.

அந்நூற்றாண்டுகளில் சைவரும் வைணவரும் சமணரும் தம்தம் சமயத் தொண்டுகளைத் தமிழ்மொழி வாயிலாகச் செய்ய நேர்ந்தமையால் கி. பி. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட இருண்ட காலப் பகுதியிலும் சில தமிழ் நூல்கள் தோன்றுவ வாயின. ஆனால், அந்நூல்கள் எல்லாம் இக் காலத்தில் நமக்குக் கிடைக்கவில்லை; அவற்றுள் சிற்சில நூல்களே இப்போது நம் கைக்கு எட்டியுள்ளன. அவையெல்லாம் சமயச் சார்புபற்றி எழுந்தனவாயினும் அவற்றின் ஆசிரியர்கள் தமிழ் மொழிக்குத் தொண்டுபுரிந்த நல்லறிஞரேயாவர். சமயத் தொண்டர்களாகிய அப்பெரியோர்கள் பல்வகைப்பட்ட தமிழ் நூல்களை அந்நாளில் இயற்றியிருத்தல் கூடும். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு 1. History of the Tamils by Mr. P. T. Srinivasa Aiyangar M. A. p. 247.