உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

1. நான்மணிக்கடிகை

.

1

து

இது நூற்றுநான்கு பாடல்களைத் தன்னகத்துக்கொண்ட ஒரு நீதி நூல். ஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு உண்மைப் பொருள்கள் சொல்லப்பட்டிருத்தலால் இது நான்மணிக்கடிகை என்னும் பெயர் எய்தியது. இந்நூல் வெண்பா யாப்பில் அமைந்தது. இஃது, ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியுள்ள எண்வகை நூல் வனப்புக்களுள் அம்மை என்னும் வனப்பின் பாற்படும் என்பது பேராசிரியர், நச்சினார்க்கினியர் ஆகிய இரண்டு உரையாசிரியர்களின் கருத்தாகும். அன்றியும், இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று என்பது 'நாலடி நான்மணி' என்று தொடங்கும் பழைய பாடலொன்றால்* அறியப் படுகின்றது. ஆனால், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எக் காலத்தில் யாரால் தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்டன என்பது புலப்படவில்லை. உரையாசிரியர்களுள் குணசாகரர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், ஆகியோரைத் தவிர மற்றை யோர் பதினெண் கீழ்க்கணக்கைக் குறிப்பிடாமை உணரத் தக்கது.

3

இனி, நான்மணிக்கடிகையின் ஆசிரியர் விளம்பிநாகனார் என்ற அறிஞர்பெருமான் ஆவர். எனவே, இவர் விளம்பி என்னும்

1. வனப்பியல் தானே வகுக்குங் காலைச்

சின்மென் மொழியாற் றாய பனுவலோ

டம்மை தானே அடிநிமிர் பின்றே

(தொல். செய்.235)

என்ற சூத்திரத்தின் உரையில் இவ்விரு உரையாசிரியன் மாரும் கூறியிருப்பது காண்க.

2.

நாலடிநான்மணி நானாற்ப தைந்திணைமுப்

பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்

இன்னிலைசொல் காஞ்சியோ டேலாதி யென்பதூஉம்

கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு

3. யாப்பருங்கலக் காரிகை, 40 -ஆம் செய்யுளின் உரை; தொல். செய்யுளியல், சூ. 547

உரை. வீர சோழிய உரையிலும் (சூத். 145) கீழ்க்கணக்குக் காணப்படுகிறது.