உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அணிந்துரை

xiii

அவை விரல்விட்டெண்ணக் கூடிய நிலையில்தான் இருக்கின்றன. எனினும் நம் முன்னோர் வரலாறுகளையும் நம் தாய் மொழியில் படித்தறிந்துக் கொள்வதைக் காட்டிலும் நமக்கு மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிக்கத் தக்கது வேறொன்றுமில்லை. ஆனால், ஆராய்ச்சி முறையில் எழுதப்பெற்ற அத்தகைய நூல்கள் நம் தமிழ்மொழியில் மிகுதியாக வெளிவரவில்லை”2 எனக் கூறியதோடு நில்லாது நல்ல தமிழ்மொழியில் ஆராய்ச்சி முறைகளோடு வரலாற்று நூல்களைத் தாமே எழுதி வழிகாட்டியவர். ஆனால் அவ் வழியைப் பின்பற்றிச் சிறந்த வரலாற்று நூல்களை எழுதாது அப்பெருமையை அவருக்கே சேரட்டும் என நம் தமிழ், வரலாற்று ஆய்வாளர்கள் எல்லோரும் விட்டுக் கொடுத்து விட்டனர் போலும்?

3

இலக்கிய வரலாறுகளை எழுதிய அவர் இலக்கியங்களின் காலமும், அவற்றை எழுதிய ஆசிரியர்களின் காலமும் தெரியாவிடில் அவ்விலக்கியங்களின் பொருளும் சரியாக உணரப்படாது. “வரலாற்று உண்மை கண்முன் இல்லாவிட்டால் ஆராய்ச்சி உண்மை காணமுடியாது என்பதை நன்குணர்ந்தவர்”4 எனவே இலக்கண இலக்கியங்களின் காலமும் அவற்றின் ஆசிரியர் காலமும் நமது வரலாற்றை, வாழ்வியலை ஆராய இன்றியமையாததாகிறது. இதனை உளங்கொண்ட பேராசிரியர் அவர்களது காலங்களை இலக்கியத் துணையோடு அக்காலத்து வெளிப்படுத்தப்பட்ட கல்வெட்டுகளையும் துணைகொண்டு ஆய்ந்து வெளிப்படுத்தியுள்ளார். இத்தகைய ஆராய்ச்சியைப் பரவலாகச் செய்தார் இவர்போலும் பேராசிரியர் அரியர்.

இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் காணப்படுகின்ற பல ஊர்களின் இருப்பிடங்களையும் அவற்றின் பெயர்ப்பொருளையும் ஆய்ந்து வெளிப்படுத்தியுள்ளார். இந்நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான பழைய வரலாறுகளைப் பற்றிய சான்றுகள் கிடைக்க கிடைக்க அவற்றை நாட்டு மக்களுக்குத் தெரிவிப்பதைத் தன் கடமையாகக் கொண்டிருந்தார். தெளிவான வரலாறு கிடைக்காதன வற்றுக்கும் வகையான சான்று கிடைக்குங்கால் எழுத மனங் கொண்டிருந்ததைத் 'தூங்கானைமாடத்தைப் பற்றிய பிற செய்திகளும் கரக்கோயில் மணிக்கோயில் இவற்றின் வரலாறும் பின்னர் எழுதப்படும்” என்பன போல வரும் வரிகளால் அறியலாம்.

இவர் தம் காலத்தில் கிடைத்த அனைத்துவகைச் சான்றுகளையும் உள்வாங்கிக் கொண்டு எழுதிய வரலாற்றுக் கட்டுரைகள் செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி தமிழ்ப்பொழில் போன்ற அக்காலச் சிறந்த தமிழ்