உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 7

நாட்டில் உள்ள திருக்கோயில்களை வணங்குவதற்கு மதுரைக்குச் சென்றி ருந்தபோது பாண்டிய அரசனும், அவனது மகளை மணந்து அங்குத் தங்கியிருந்த சோழ மன்னன் ஒருவனும் அவ்விரு பெரி யாரையும் வரவேற்றுத் திருக்கோயிலுக்கு அழைத்துப்போயினர் என்று கூறியுள்ளார். ஆனால், அந்நாளில் ஆட்சி புரிந்து வந்த பாண்டிமன்னன் இன்னவன் என்றாதல், அங்கிருந்த சோழன் இன்னவன் என்றாதல் அவ்வடிகள் வெளிப்படையாகக் கூறிச் சென்றாரில்லை. எனவே, புலவர் பெருமானாகிய சேக்கிழாருக்கு அன்னோர் யாவர் என்றுரைத்தற்குரிய கருவிகள் அப்போழ்தே கிடைக்கவில்லை என்பது நன்கு புலப்படுகின்றது.

இனி, அந்நாளில் பாண்டிய நாட்டில் அரசு செலுத்தியவன் வரகுணபாண்டியன் என்று தெரிவித்தவர், திருவிளையாடற் புராணத்தின் ஆசிரியராகிய பரஞ்சோதி முனிவர் ஆவர். அவர் கூறுவது: மன்றலந் தெரியல் மார்பன்

என்பது.

வரகுணன் செங்கோல் ஓச்சிப்

பொன்றலங் காவாலானிற்

பொலியுநாள் ஏம நாதன்

என்றொரு விறல்யாழ்ப் பாணன்

வடபுலத் திருந்தும் போந்து

வென்றிகொள் விருதினோடும்

விஞ்சைசூழ் மதுரை சார்ந்தான்.

(திருவிளை, விறகுவிற்ற, 2.)

பரஞ்சோதிமுனிவர் சேக்கிழாரடிகட்குப் பல நூற்றாண்டு கட்குப் பின்னர் இருந்தவர், கி.பி பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த நம் சேக்கிழார்பெருமான் அறிந்து கொள்ள முடியாமலிருந்த செய்திகளை மிக அண்மைக் காலத்தில் நிலவிய பரஞ்சோதி முனிவர் எங்ஙனம் கூறவல்லராயினரோ அறியேம். இங்ஙனம் இம்முனிவர் கூறும் செய்திகள் பலவும், வரலாற்றுண்மைக்கு முரண்பட்டிருத்தலை ஆராய்ச்சியாளர் பலரும் நன்குணர்வர்.

இனி, திருஞானசம்பந்தரால் வெப்புநோயினின்று காப்பாற்றப் பட்டவன், கூன்பாண்டியன் என வழங்கும் சுந்தர பாண்டியன்