உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இலக்கியமும் கல்வெட்டுக்களும்

5

ஆவன் என்று பரஞ்சோதி முனிவர் கூறியுள்ளார். இம்முனிவரே அரிமர்த்தன பாண்டியனிடத்தில் திருவாதவூரர் அமைச்சரா யிருந்தனர் என்று உணர்த்தியுள்ளார். சுந்தர பாண்டியற்குப் பத்துத் தலை முறைகட்கு முந்தியவன் அரிமர்த்தன பாண்டியன் என்பது அத்திருவிளையாடற் புராணத்தால் அறியக் கிடக் கின்றது. இவ்வரிமர்த்தன பாண்டியற்கு நாற்பத்து மூன்று தலைமுறைகட்கு முன்னர் வாழ்ந்தவன் வரகுண பாண்டியன் என்றும், கழறிற்றறிவாரும் அவரது நண்பராகிய சுந்தரமூர்த்தி களும் இவ்வரகுணன் காலத்தினராவர் என்றும் அப்புராணம் கூறுகின்றது. ஆகவே, திருஞானசம்பந்தர் காலத்தினனாகிய சுந்தர பாண்டியற்கு ஐம்பத்து மூன்று தலைமுறைகட்கு முன்னர் வாழ்ந்தவன் வரகுணபாண்டியன் என்றும், கழறிற்றறிவாரும் அவரது நண்பராகிய சுந்தரமூர்த்திகளும் இவ்வரகுணன் காலத்தினராவர் என்றும் அப்புராணம் கூறுகின்றது. ஆகவே, திருஞானசம்பந்தர் காலத்தினனாகிய சுந்தர பாண்டியற்கு ஐம்பத்து மூன்று தலைமுறைகட்கு முன்னர் வாழ்ந்தவன் சுந்தர மூர்த்திகள் காலத்தினனாகச் சொல்லப்படும் வரகுண பாண்டியன் என்பது, திருவிளையாடற் புராணமுடையாரது முடிபாகும். தலைமுறை ஒன்றிற்கு முப்பது ஆண்டுகளாகக் கொண்டு காலத்தைக் கணக்கிடுவதுதான் பொருத்த முடைத்து என்று வரலாற்று நூல் வல்லார் கூறுகின்றனர். எனவே, சுந்தரமூர்த்திகள் திருஞான சம்பந்தருக்கு 1590 ஆண்டுகட்கு முன்னர் இந்நிலவுலகில் வாழ்ந்தவர் என்பது திருவிளையாடற் புராணத்தால் அறியக் கிடக்கும் செய்தியாகும்.

திருஞானசம்பந்தர் திருக்கோலக்காவிற் பொற் றாளம் பெற்றதையும்', திருவீழி மிழலையில்

,

படி

க்காக

1. நாளுமின்னிசை யாற்றமிழ்பரப்பு

ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன் தாளுமீந்தவன் பாடலுக்கிரங்குத் தன்மையாளனை யென்மனக் கருத்தை யாளும் பூதங்கள் பாட நின்றாடும்

அங்கணன்றனை யெண்கணமிறைஞ்சும் கோளிலிப்பெருங் கோயில் உள்ளானைக்

கோலாக்காவின்றி கண்டுகொண்டேனே.

-

- திருக்கோலக்கா, 8