உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

தி. .வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -7 பெற்றதையும் சுந்தரமூர்த்திகள் தாம் பாடியுள்ள தேவாரப் பதிகங்களில் குறித்திருத்தலோடு திருத்தொண்டத் தொகையில் அவ்வடிகட்கு வணக்கமுங் கூறியுள்ளனர். எனவே சுந்தர மூர்த்திகள், திருஞான சம்பந்தருக்குப் பல ஆண்டுகட்குப் பின்னர் வாழ்ந்தவராதல் வேண்டுமென்பது, அகச்சான்று கொண்டு நன்கு துணியப்படும். இத்துணைச் சிறந்த ஆதாரங்கட்கு முரணாகத் திருவிளையாடற் புராணமுடையார் கூறுவது சிறிதும் உண்மை யுடைத்தன்று. ஆகவே, சுந்தரமூர்த்திகள் வரகுண பாண்டியன் காலத்தினர் அல்லர் என்பது வெளியாதல் காண்க. அன்றியும் திருவிளையாடற் புராணம் செந்தமிழ் வளஞ் செறிந்த சிறந்த நூலாதலின் தமிழ் மொழிப் பயிற்சிக்குப் பயன்படுமேயன்றி, வரலாற்று ஆராய்ச்சிக்குச் சிறிதும் பயன் படா தென்றுணர்க. இவ்வுண்மையைத் 'தமிழ் வரலாற்'றின் ஆசிரியரும் நன்குணர்ந் துரைத்திருப்பது பெரிதும் பாராட்டற் பாலதாகும்.

இனி, சுந்தரமூர்த்திகள் பாடியுள்ள-

கருமையாந் தருமனார் தமர்நம்மை கட்டியகட் டறுப்பிப் பானை

யருமையாந் தன்னுலகந் தருவானை

மண்ணுலகங் காவல் பூண்ட

உரிமையார் பல்லவர்க்குத் திறைகொடா

மன்னவரை மறுக்கஞ் செய்யும்

பெருமையாற் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.

என்னும் திருப்பாட்டால் அடிகள் காலத்தில் பல்லவரது ஆட்சி தளர்ச்சியுறத் தொடங்கிற்றென்றும், அதனால் அன்னோர்க்குக் குறுநில மன்னர்கள் திறை செலுத்த மறுத்தனர் என்றும், பல்லவர்களுள் நந்திவர்மன் (780-830) ஆட்சிக்காலத்தில் தான்

1. பரந்தபாரிட மூரிடைப்பலிபற்றிப் பார்த்துணுஞ் சுற்றமாயினீர் தெரிந்தநான்மறையோர்க் கிடமாய் திருமிழலை

இருந்துநீர் தமிழோடிசை கேட்குமிச்சையாற் காசுநித்தனல்கினீர் அருந்தண் வீழிகொண்டீரடியேற்கு மருளுதிரே

- திருவீழிமிழலை, 8