உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 7

ஆகவே, அடிகள் இராசசிங்கன் காலத்தின ராதல் வேண்டும். இவ்வேந்தனை இரண்டாம் நரசிங்கவர்மன் என்றும், முதல் இராசசிங்கவர்மன் என்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர் கூறுவர். இவனே காஞ்சியிலுள்ள கைலாய நாதர் கோயிலை எடுப்பித்தவன். இஃது அக்காலத்தில் இராசசிம்ம பல்லவேச்சுரம் என்னும் பெயருடையதாயிருந்தது. இக்கோயிலில் இவனது கல்வெட் டொன்று வடமொழியில் வரையப் பட்டுள்ளது. அஃது இவ்வேந்தனைச் 'சிவசூடாமணி' என்று புகழ்கின்றது. (South Indian Inscriptions Volume I No. 24). இங்ஙனமே மகாபலிபுரம் என வழங்கும் மாமல்லபுரத்தில் இவனெடுப்பித்த இராசசிம்ம பல்லவேச்சுரம் என்ற திருக் கோயிலிலுள்ள கல்வெட்டும் பனைமலைக் கோயிலிலுள்ள கல்வெட்டும் இவனைச் 'சிவ சூடாமணி' என்று புகழ்தல் ஈண்டு அறியத் தக்கது. காசாக்குடிச் செப்பேடுகள் பரமேச்சுரனே இராசசிங்கப் பல்லவனாக அவதரித் துள்ளாரென்று சிறப்பித்துக் கூறுகின்றன (S.I.I.Volume II No. 73). உதயேந்திரஞ் செப்பேடுகள் இவனைப் 'பரமமாகேச்சுர’ னென்று புகழ்ந்துரைக்கின்றன (S.I.I.Volume II No. 74). வேலூர்ப் பாளையம் செப்பேடுகள் இவன் சிவபெருமானுக்குக் காஞ்சி மாநகரில் கைலாயத்தை யொத்த திருக்கோயிலொன்றை எடுப்பித்த பெருமையுடையவன் என்றுணர்த்துகின்றன (S.I.I.volume II No. 98). இக் கைலாயநாதர் திருக் கோயிலில் நரசிங்கவர்மனுக்கு அந்நாளில் வழங்கிய இரு நூற்றைம்பது பட்டங்கள் பொறிக்கப் பட்டிருத்தலை இன்றும் காணலாம். அவற்றுள், 'சங்கரபக்தன்,’ ‘ஈசுவர பக்தன், ஆகிய பட்டங்கள் வ்வேந்தன் சிறந்த சிவபக்தியுடையவனாய்த் திகழ்ந்தனன் என்பதை நன்கு விளக்குகின்றன (S.I.I. Volume I No. 25 Verse 55).

பல்லவர் சரித்திரம் எழுதிய அறிஞராகிய துப்ரே துரை மகனார் இவ்வரசனைப் பற்றிக் கூறுவது: "நெடுங் காலம் குடிகளை எவ்வகை இன்னல்களுமின்றிக் காத்து வந்த பல்லவ அரசன் இவன் ஒருவனேயாவன். இவன் தன் ஆட்சிக்காலத்தில் காஞ்சியில் கைலாயநாதர் கோயிலையும், மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோயிலையும் விழுப்புரந் தாலுகாவிலுள்ள பனை மலையில் ஒரு கோயிலையும் எடுப்பித்துச் சிவனடியார்களைப்