உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இலக்கியமும் கல்வெட்டுக்களும்

11

களாலும் பெறப் படுகின்றது. ஆகவே, நம் இரண்டாம் நரசிங்க வர்மன் பேரரசனாதல் காண்க. உமாபதி சிவாசாரியார் இதனை நோக்காது இவ்வேந்தனைக் குறுநில மன்னர்களுட் சேர்த் திருப்பது பொருந்தா தென்க.

இனி, இரண்டாம் நரசிங்கவர்மனது ஆட்சிக் காலம் கி.பி. 690-க்கும் 710-க்கும் இடைப்பட்டதாதலின் சுந்தர மூர்த்கிளும் அக்காலத்தில் வாழ்ந்தவராதல் வேண்டும். எனவே, நம் சுந்தர மூர்த்திகள் கி.பி ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும், எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நம் தமிழகத்தில் வாழ்ந் தருளிய பெரியாரென்பது வெளியாதல் காண்க. இவ்வடிகள் காலத்தினர்களான சோமாசிமாறர், விறன்மிண்டர், மானக் கஞ்சாறர், ஏயர்கோன் கலிக்காமர், பெருமிழலைக்குறும்பர், கோட்புலியார், பூசலார், செருத்துணையார் என்னுஞ் சிவனடியார்கள் வாழ்ந்த காலமும் இதுவேயாகும்.