உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

கிறது.

2. கம்பர் காலம்

இராமாயணப் பிரதிகளில் ஒரு தனிப்பாடல் காணப்படு

எண்ணிய சகாத்தம் எண்ணூற்று

ஏழின்மேல் சடையன் வாழ்வு

நண்ணிய வெண்ணெய் நல்லூர்

தன்னிலே கம்ப நாடன்

பண்ணிய இராம காதை

பங்குனி அத்த நாளில்

கண்ணிய அரங்கர் முன்னே

கவியரங் கேற்றி னானே.

என்பதாகும். இத்தகைய பாடலை வைணவர்கள் தனியன் என்று வழங்குவர். இப்பாட்டில் சகம் 807 ஆம் ஆண்டில் இராமாயணம் கம்பரால் அரங்கேற்றப் பெற்றது என்ற செய்தி கூறப்பட்டுள்ளது. எனவே கி.பி.885-ல் இவ்வரங்கேற்றம் நடைபெற்றதாதல் வேண்டும். இக் காலத்தை ஏற்றுக் கொள்வதற்கு இப்பாடலைத் தக்க ஆதாரமாகக் கொள்ள முடியவில்லை. கம்பரைக் குறிக்கு மிடத்து இப்பாடல் “கம்பநாடன்” என்று கூறுகின்றது. இவரை இராமாயணத் தனியன்களில் ஒன்று கம்பநாடுடைய வள்ளல்” என்றும் அரசகேசரியார் தம் இரகுவமிசத்தின் பாயிரத்தில் 'கம்பநாடன்' என்றும் கூறியிருப்பன வெல்லாம் பிற்காலத் தெழுந்த வழக்கேயாம். கம்பநாடு என்ற பெயருடன் முற்காலத்தில் ஒரு நாடு இருந்தது என்பதற்குக் கல்வெட்டுக்களிலாதல் செப்பேடு களிலாதல் சிறிதும் ஆதார மின்மை அறியத்தக்கது. எனவே இப்பாடல் பழைமை வாய்ந்ததும் அன்று; உண்மைச் செய்தியைக் கூறுவதும் அன்று.

கம்பரது இராமயணத்தில் சீவகசிந்தாமணியிலிருந்து எடுத்தாளப்பட்ட கருத்துக்களும், சூளாமணி விருத்தமுறை