உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 7

ஆயிரத்து நூறொழித்த - தேவின்' என்ற பழம் பாடற்பகுதியால் அறியப்படும் காலக்குறிப்பாகும். இவற்றுள் முன்னையது; எல்லாச் சோழ மன்னர்க்கும் பொதுவான சிறப்புடையச் செயலேயா மென்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. முதல் இராசாதிராச சோழன் 'தியாகமே அணியாகக்' கொண்டவன் என்றும், வீர ராசேந்திரன் சோழன் 'வீரத் தனிக்கொடி தியாகக் கொடியோடும்' அரசாண்டவன் என்றும், 'அதிராசேந்திர சோழன் 'தியாகக்கொடி' யுடையவன் என்றும், 'முதற் குலோத்துங்க சோழன் ‘வீரமுந் தியாகமும் விளங்கப் பார்மிசை' ஆண்டவன் என்றும் 'கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. ஆகவே, சோழமன்னர்கள் எல்லோருமே தியாக விநோதர்களாக இருந்தனர் என்பதில் ஐயப்பாடு சிறிதும் இல்லை. ஆதலால் தியாகவிநோதன் என்ற தொடர் மூன்றாங் குலோத்துங்க சோழனையே குறிக்குமென்று கொள்வதற்கு இடமின்மை அறியற் பாலதாம்.

இரண்டாவது சான்றாகக் காட்டப்படும் பழம் பாடலில் குறிக்கப்பெற்ற 'ஆயிரத்து நூறொழித்த' சகம் ஆண்டு தொள்ளாயிரம் ஆகுமேயன்றி ஆயிரத்து நூறாகாது. எனவே, அதிற்கண்ட காலக் குறிப்பு, கி.பி. 978-ஆம் ஆண்டைக் குறிக்கு மேயல்லாமல் கி.பி. 1178-ஆம் ஆண்டைக் குறிக்காது என்பது தேற்றம். ஆகவே, இரண்டாவது சான்றும் பொருந்தாமை காண்க. இதுகாறும் கூறியவற்றால் கம்பர் இராமாயணம் பாடியது மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலமாகிய கி.பி. 1178-ஆம் ஆண்டன்று என்பது நன்கு தெளியப்படும்.

இனி, கம்பர், பிலநீங்குபடலத்திலுள்ள,

6

புவிபுகழ் சென்னிபே ரமலன் தோள்புகழ்

கவிகள் தம் மனையெனக் கனக ராசியும்

சவியுடைத் தூசுமென் சாந்து மாலையும் அவிரிழைக் குப்பையு மளவி லாதது.

1. S.I.I.Vol. V. No. 465

2. Epigraphia Indica Vol. XVI, No. 38.

3. S.I.I. Vol. VIII. NO. 4

4. S.I.I., Vol. V. No. 1003.

.