உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

3. நம்பியாண்டார் நம்பி காலம்

நம்பியாண்டார் நம்பியென்பார் சிதம்பரத்திற்கு மேற் கேயுள்ள திருநாரையூரிலிருந்த ஓர் ஆதிசைவ அந்தணராவர். வர் இளமையிற் பொல்லாப் பிள்ளையாரை வழிபட்டு அருள்பெற்றவர் என்பதும் இராசராச அபயகுலசேகரன் வேண்டிக் கொண்டவாறு சைவசமய குரவர்களும் பிற சிவனடியார்களும் பாடியருளிய பதிகங்கள் எல்லாவற்றையும் தேடிப் பதினொரு திருமுறைகளாக வகுத்துத் தொகுத்தவர் என்பதும் திருமுறை கண்ட புராணத்தால் அறியப்படுகின்றன. அந்நூலிற் குறிப்பிடப்பெற்ற இராசராச அபயகுலசேகரன் என்பான் முதல் இராசராசசோழனாவன் என்றும் அவ்வேந்தனே நம்பியாண்டார் நம்பியின் துணைகொண்டு திருமுறைகளைத் தேடிக்கண்டு, பின்னர் அவற்றைத் தொகுப்பித்தவன் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதுபற்றியே அம்மன்னனும் திருமுறைகண்ட சோழன் என்று வழங்கப் படுகின்றனன். தமிழகச் சைவ சமய வரலாற்றில் உறுதிப்படுத்தப் பட்டதாகக் கருதப் படும் இக்கொள்கையிற் சில ஐயங்கள் தோன்றுவதால் இதனை மீண்டும் ஆராய்வது இன்றியமையாததாகும்.

நம்பியாண்டார் நம்பி இயற்றிய பத்து நூல்கள் பதினோராந் திருமுறையிற் காணப்படுகின்றன. அவற்றுள் திருத்தொண்டர் திருவந்தாதி என்பதும் ஒன்றாகும். அது, சேக்கிழாரடிகள் திருத்தொண்டர் புராணமாகிய பெரிய புராணம் பாடுவதற்கு ஆதாரமாகக் கொண்ட நூல்களுள் ஒன்று. அவ்வுண்மையை,

66

அந்த மெய்ப்பதி கத்தடி யார்களை நந்த நாதனாம் நம்பியாண்ட டார்நம்பி புந்தி யாரப் புகன்ற வகையினால்

வந்த வாறு வழாமல் இயம்புவாம்”2

1. திருமுறைகண்ட புராணம், பாடல்கள் 24-29

2. பெரியபுராணம் திருமலைச் சிறப்பு பா.39

1