உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -7

ஒருவனைத் தம் திருத்தொண்டர் திருவந்தாதியியல் மூன்று பாடல்களிற் பாராட்டியுள்ள செய்தியை அந்நூலை ஒருமுறை படிப்போரும் உணர்ந்து கொள்ளலாம். அப்பாடல்கள்,

6

புலமன்னிய மன்னைச் சிங்கள நாடு பொடிபடுத்த குலமன்னிய புகழ்க் கோகன நாதன் குலமுதலோன்

நலமன்னிய புகழ்ச் சோழன தென்பர் நகுசுடர்வாள் வலமன்னிய எறிபத்தனுக் கீந்ததொர் வண்புகழே'

(திரு அ.50)

சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு கொங்கிற் கனக மணிந்த ஆதித்தன் குலமுதலோன் திங்கட் சடையர் தமரதென் செல்வமெனப் பறைபோக் கெங்கட் கிறைவன் இருக்குவே ளூர்மன் இடங்கழியே'

(திரு.அ.66)

செம்பொன் அணிந்துசிற் றம்பலத் தைச்சிவ லோகமெய்தி நம்பன் கழற்கீ ழிருந்தோன் குலமுதல் என்பர்நல்ல வம்பு மலர்த்தில்லை ஈசனைச் சூழ மறைவளர்த்தான் நிம்ப நறுந்தொங்கற் கோச்செங்க ணானெனும் நித்தனையே'

(திரு. அ. 82) என்பனவாம். இவற்றில் அச்சோழன் கொங்குநாட்டிலிருந்து பொன் கொணர்ந்து தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்தவன் என்றும், ஈழநாட்டை வென்றவன் என்றும், புகழ்ச்சோழர் கோச்செங்கட்சோழர் ஆகிய அடியார்களைத் தன் முன்னோர்களாகக் கொண்டவன் என்றும் இவ்வாசிரியர் கூறியது உணரற்பாலதாகும். ஆகவே இப்புலவர் பெருமான் அவ்வரசன் காலத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்பது தேற்றம். இனி, அவ்வேந்தன் யாவன்? என்பது ஆராயற்பாலதாம்.

சோழ மன்னருள ஆதித்தன் என்னும் பெயருடையார் இருவர் உள்ளனர். அவர்களுள் முதல்வன், பரகேசரி விசயாலய சோழன் புதல்வனாகிய முதல் ஆதித்த சோழன் என்பான். மற்றையோன் சுந்தரசோழன் மூத்தமகனும் முதல் இராசராச சோழன் தமையனுமாகிய இரண்டாம் ஆதித்த சோழன் ஆவன். அவனை ஆதித்த கரிகாலன் என்றும் அந்நாளில் வழங்கி