உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 7

இனி, இவ்வாதித்தன் புதல்வன் முதற்பராந்தக சோழன் என்பான் தில்லைச்சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்தான் என்று ஆனைமங்கலச்செப்பேடுகளும்' திருவாலங்காட்டுச் செப்பேடு களும்' உணர்த்துகின்றன. கொங்குதேச ராசாக்கள் சரிதமும் இச்செய்தியை உறுதிப்படுத்திகின்றது. எனவே, முதற் பராந்தக சோழனது ஆட்சிக்காலத்திலும் தில்லைச்சிற்றம்பலம் மீண்டும் பொன்வேயப்பட்டது என்று கொள்வதே பொருத்தமுடைய தாகும். அங்ஙனமே, முதற் குலோத்துங்க சோழனது ஆட்சியின் 44- ம் ஆண்டாகிய கி. பி. 1114ல் அவன் தங்கை குந்தவை யென்பாள் தில்லைக்கோயிலைப் பொன் வேய்ந்தனள் என்று அக்கோயிற் கல்வெட்டொன்று அறிவிக்கின்றது. அவன் மகன் விக்கிரமசோழன் என்பான் கி.பி. 1128-ல் சிற்றம்பலத்தைச் சூழ்ந்த திருச்சுற்றுமாளிகையையும் திருக்கோபுரத்தையும் ம் பொன்வேய்ந்தான் என்று அவன் மெய்க்கீர்த்தி கூறுகின்றது.4 அவன் படைத்தலைவனாகிய மணவிற்கூத்தன் காலிங்கராயன் என்பவன் தில்லையிற் பொன்னம்பலத்தைப் பொன்வேய்ந்தான் என்று அங்குள்ள கல்வெட்டுகளுள் ஒன்று தெரிவிக்கின்றது விக்கிரமசோழன் மகனாகிய இரண்டாம் குலோத்துங்கசோழன் தில்லைச் சிற்றம்பலத்தையும் பிறவற்றையும் பொன்வேய்ந்தான் என்று இராசராசசோழனுலா உணர்த்துகின்றது.6

இவற்றையெல்லாம் கூர்ந்து நோக்குமிடத்து, சோழ மன்னர் ஆட்சிக்காலங்களில் தில்லைச் சிற்றம்பலம் பன்முறை பொன்வேயப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாகும். ஆனால், அதனை முதலில் பொன்வேய்ந்த சோழ மன்னன் விசயாலயன் புதல்வனாகிய முதல் ஆதித்தனேயாவன். அவ்வரும் பணியாற்றிய காரணம் பற்றி அச்செயலைத் தம் திருத் தொண்டர் திருவந்தாதியிற் பாராட்டியுள்ளனர் என்பது தெள்ளியது.

1. Ibid Vol. XXII, No. 34. Verse 17. 2.S.I.I.Vol. III. No. 205. Verse 53.

3. Ep. Ind. Vol. V. No. 13.C

4. S.I.I. Vol. V. No. 458

5. Ibid. Vol. IV. No. 225.

6. இராசராசசோழன் உலா, 59-66