உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இலக்கியமும் கல்வெட்டுக்களும்

21

இவர் சிதம்பரத்திற்கு அண்மையிலுள்ள திருநாரையூரி லிருந்தவராதலின் இவ்வரசன் தில்லையிற் புரிந்த அத் திருத் தொண்டில் தாம் நேரிற் கலந்து கொண்டு அதனை அறிந்திருந் தலும் இயல்பேயாம்.

ஆகவே நம்பியாண்டார் நம்பி இவன் ஆட்சிக்காலமாகிய கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவராதல் வேண்டும். இக் கவிஞர் பெருமான் அந்நூலிலுள்ள 82-ம் பாடலில் இவன் சிவபெருமான் திருவடி நீழலெய்திய செய்தியையும் குறிப்பிடுவதால் இவனுக்குப் பிறகு கி. பி. 907-ல் பட்டம்பெற்ற இவன் புதல்வன் முதற் கி.பி. பராந்தக சோழன் ஆட்சியின் முற்பகுதியிலும் சில ஆண்டுகள் வரை இருந்திருத்தல்கூடும்.1

H

1. இவர் முதல் இராசராச சோழனைத் தம் திருத்தொண்டர் திருவந்தாதியிற் குறிப்பிடாமை

யொன்றே இவர் அவ்வேந்தன் காலத்தவரல்லர் என்பதை நன்கு புலப்படுத்துவதாகும்.