உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிந்துரை

ix


காலத்தில் வரையப்பெற்ற கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் ஆகும்.” என்கிறார் (125)

கிராமம் என்னும் பொதுப்பெயர் ஓரூர்க்குச் சிறப்புப் பெயராகிய வகையைக் குறிப்பிடுகிறார். ஊரின் பெயர், முடியூர் என்பது. வட மொழியில் 'மௌலிகிராமம்' எனப்பட்டு, கிராமமாக நின்றுவிட்டது என்கிறார் (125-128)

ஏடேறியவையும் அச்சேறியவையும் அறிவர் வாயேறியவையும் ஆகிய எல்லாமும் நம்புதற்குரியவை ஆகா; அவற்றிலும் இட்டுக் கட்டப்பட்டவையும் பொய்யாய்ப் புனைந்தவையும், நம்புதற்கு மறுதலையானவையும் உண்டு என்பதால் தான் திருவள்ளுவர்.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”

என்றார். அந்நிலையில் பேரறிஞராகிய மறைமலையடிகளும் திருவள்ளுவ மாலை சங்கச் சான்றோர் இயற்றியது என்று நம்பினார்! நம் சிவனாரும் அவ்வாறே நம்பினார்! (140). ஆனால் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் இயற்றியதே 'ஞான வெட்டி' என்று வெறுவாயை மெல்லுவார் கருத்தை ஒப்பாது கால அடைவு, யாப்பு,பொருள் நிலை காட்டி மறுத்துரைத்து உண்மையை நிலைநாட்டுகிறார் (138-142)

சாதிமை பாராச் செந்தண்மை அந்தண்மையைச் சாதிமைப் படுத்தும் செருக்கரை நிந்திப்பதை, அந்தண்மை நிந்திப் பாகக் கருதுவது ஆசிரியர் பழவடிமைச் சான்றை வெளிப் படுத்துகின்றது (140)

கல்லாடம் இயற்றிய கல்லாடர், சங்கநாள் கல்லாடர் அல்லர் என்றும் கி.பி. பதின் மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிற்படவே வாழ்ந்தவர் என்றும் கூறுகிறார் தொல். சொல். உரையாசிரியர் கல்லாடர் என்பார் பற்றி இக்கட்டுரையில் குறிப்பு இல்லாமையால், அவர் இக்கட்டுரை எழுதும் காலத்தில் க் கல்லாடவுரை வெளிப்பட்டதாகவில்லை என்பது விளங்கும் (143-150)

வேம்பைக் கோன் நாராயணனைப் பற்றி எழுதவரும் சிவனார், வேம்பற்றூர்க் குமரனார், செவ்வைச் சூடுவார், ஆளவந்தான், மாதவபட்டர், வீரைக் கவிராச பண்டிதர்,