உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viii

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-8



“விக்கிரம சோழமாராயர் அகமுடையாள்” (72)

“தஞ்சாவூர் கிழவன் உலகளந்தான் அகமுடையாள் உய்யக்கொண்டாள்’ (112)

என்பன ‘ஆம்படையாள்‘ என்பதன் மெய்வடிவம் காட்டுவன.

மூடுதல் (கவசம்) என்பது 'மெய்காப்பு' என அருமையாக ஆளப்படுகிறது (112)

பழநாளில் 'மெய்மறை' எனப்பட்டது அது.

'செம்பாதி' என்றும் ஆட்சி உள்ளம் கவர்கிறது. அறிஞர் சதாசிவனார், ‘பெருவழி' (Road) 'பணிமகன்' (Servant) ‘புதுக்குப் புறம்' (Cost for repairing) என்று இக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ள செந்தமிழ்த் தொடர்மொழிகள் நமது உள்ளத்தைப் பிணிக்கும் தன்மையனவாயிருக்கின்றன என்று வியக்கிறார். (91).

திருவெள்ளறையில் தோண்டப் பெற்ற கிணற்றின் பெயர், 'மாற்பிடுகு' பெருங்கிணறு என்பது. இதனைக் கூறும் சிவனார், இந்நாளில் ஆற்றின் பாலங்களுக்கும், பிற கட்டடங்களுக்கும் பெயரிட்டு வழங்குவது போல அந்நாளிலும் அத்தகைய வழக்கம் இருந்தது என்கிறார் (86)

அகநானூற்றுக்கு அகவலால் உரை செய்த பால்வண்ண தேவனான வில்லவதரையன் ஊர் மணக்குடி : அது, திருத் தரு பூண்டிக் கூற்றத்திலே உள்ளது எனத் தெளிவிக்கிறார். (120)

இடை மருதும் இடவையும் ஓர் ஊரே என்னும் ஆய்வாளர்கள் உரையை, இரண்டும் வேறு வேறே என்பதைத் திருநாவுக்கரசர் பாடிய சேத்திரக் கோவையில் வரும்,

இடைமருது ஈங்கோய் இராமேச்சரம் இன்னம்பர்
ஏர் இடவை ஏமப் பேரூர்.”

என்பது கொண்டு தெளிவிக்கிறார்.

ஊர்ப்பெயர் ஆய்வு நெறி இஃதெனக் கிராமம் என்னும் கட்டுரை முகப்பில் சுட்டுகிறார் அறிஞர் சதாசிவனார்.

தமிழ்நாட்டு ஊர்களின் பழைய பெயர்களையும், அவ்வூரின் இடைக்காலத்தில் எய்திய வேறு பெயர்களையும், அவற்றின் வரலாற்றையும் அறிந்து கொள்வதற்குத்தக்க ஆதாரங்களாக இருப்பவை, பன்னிரு திருமுறைகளும், தமிழ்வேந்தர்கள்