உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிந்துரை

xi


இருந்தமை சங்கப் புலவர் பெயர்களை அறிவார் அறிவர் (172-173).

கரந்தை என்னும் பெயர் எவரும் அறிந்தது. கருந்தட்டான் குடி என்பது மக்கள் வழக்கு. ஆனால், கருந்திட்டைக்குடி என்னும் பெயரினது அது என்பதைக் கல்வெட்டால் ஆசிரியர் காட்டுகிறார். (175).

பழவரலாற்றை நிறுவப் புது நிகழ்ச்சி காட்டல் இணைத்து நோக்கித் தெளிவுபெற உதவுகின்றது.(173)

தமிழரல்லாத சிலர், "தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகளுக்குத் 'திராவிடி' என்ற தாய் மொழி ஒன்று இருந்தது என்பது அறியாமையால் அன்று. வேண்டுமென்றே அவ்வாறு சொல்லிப் பரப்புவதற்குக் காரணம், தமிழ் மொழியைத் தென்னாட்டு மொழிகளுக்குத் தாய்மொழியாக ஏற்றுக் கொண்டு அதற்கு முதன்மையும் தனிச்சிறப்பும் அளித்தற்குச் சிறிதும் இடம் கொடுக்கக்கூடாது என்ற எண்ணமேயாம்." என்பது சிவனார் கொண்ட உளைவின் வழி வெளிப்பட்ட மறுப்பாகும் (184-185)

புதிய ஆண்டு தொல்காப்பியர் காலத்தில் ஆவணியில் தொடங்கியிருத்தல் வேண்டும் என்கிறார் (186)

ஆதிகாலம், கடைச்சங்க காலம், இருண்ட காலம், பல்லவ பாண்டியர் காலம், சோழர் காலம் பிற்காலப் பாண்டியர் காலம், அந்நியர் ஆட்சிக்காலம் என இலக்கிய வரலாற்றுச் சுருக்கத்தை அறியும் வகையில் எழுதுகிறார் (தமிழ் இலக்கியச் சரிதச் சுருக்கம் 184 - 194).

கவிஞர் பெருமானாகிய ஒட்டக்கூத்தர் பிறந்த மலரி என்னும் ஊர், திருச்சிராப்பள்ளியை அடுத்துள்ள திருவரம்பூர் என வழங்கும் திருஎறும்பியூரே என்பது அங்குள்ள கோயில் கல்வெட்டால் புலப்படுகிறது என்கிறார் (195)

ஒட்டக்கூத்தர்காலத்துப் புலவர்கள் நம்பிகாளியார், நெற்குன்றவாணர், தமிழ்த் தண்டியாசிரியர், தக்கயாகப்பரணி உரையாசிரியர், தொல்காப்பியத்திற்கு உரைகண்ட பேராசிரியர் முதலானோர் ஆவர். கம்பர், புகழேந்தி, சேக்கிழார் ஆகியோர் இவர்காலத்தவர்அல்லர் என்கிறார். ஏனெனில் கம்பர்,