உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-8


சோழர்குடியிற்றோன்றியோ ரொன்பதின்மர் உண்ணாடுகளிற் கலகஞ் செய்துவந்தனர்; உறையூர்க்குத் தென்புறத்துள்ள நேரிவாயிலில், சேரன்செங்குட்டுவன் இவர்களைப் போரில் வென்று மைத்துனனாகிய கிள்ளிவளவனது ஆட்சியைச் சோணாட்டில் நன்கு நிலைநாட்டினா னென்பது பதிற்றுப்பத்து 5- ம்பத்தின் பதிகத்தானும் சிலப்பதிகாரத்தானும் அறியப்படுகிறது. இதனால், இக்குடியினர் பலர் இந்நாடுகளில் யாண்டும் வசித்து வந்தனரெனத் தெரிகிறது. இவர்கள் உண்ணாடுகளிலும், சோழமன்னர்களால் ஜெயிக்கப் பெற்ற புறநாடுகளிலும் சிற்றரசர்களாகவும் தண்டத் தலை வராகவும் மண்டிலமாக் களாகவும் கோட்டம், கூறு, நாடு முதலியவற்றின் அதிகாரிகளாகவும் இருந்துவந்தனராதல் வேண்டும். கோப்பெருஞ் சோழனென்போன், தன்மேற்பகை கொண்ட தன்மக்களிருவருடன் போர்க்கெழுந்த ஞான்று புல்லாற்றூர் எயிற்றியனாரென்னும் புலவர்பெரு மானாற் சமாதானஞ்செய்யப்பட்டுத் தன்னர சை யவர்கட்களித்துத் தான் வடக்கிருந்து உயிர் துறந்தனனென்பது புறப்பாடல்களால் அறியப்படுகின்றது. சோழன் செங்கணான், அறுபான் மும்மை நாயன்மார்களில் ஒருவராக விளங்கிய வளவர்பெருமான்.