உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

9


ஷேமத்தைப் பெருக்கி, கோயிலமைத்து, தன்னிராஜதானியைச் சுற்றி மதிலெழுப்பித் தேசத்தைச் சரியாகப் பாதுகாத்தா னென்பது,

“காடுகொன்றுநாடாக்கிக்
குளந்தொட்டுவளம் பெருக்கிப்
பிறங்குநிலை மாடத்துறந்தை போக்கிக் கோயிலொடுகுடிநிறீஇ
வாயிலொடுபுழையமைத்து ஞாயிறொறும் புதைநிறீஇ”

என்ற பட்டினப்பாலைச் செய்யுளடிகளால் அறியப்படுகிறது.

அன்றியும், முதற்கயவாகுவின் தகப்பன்காலத்தில், இவன் இலங்கையின் மீது படையெடுத்துச் சென்று, 12000 சிங்களவர்களைச் சிறைபிடித்துச் சோழதேசத்திற்குக் கொண்டுவந்து, காவிரியினிரு மருங்குங் கரையெடுப்பித்தான். இதனை “தொழுது மன்னரேகரை செய்பொன்னியில்“ என்ற கலிங்கத்துப் பரணிச் செய்யுளாலுணர்க. இதனால், இவன் பகைவரைவெல்லு மாண்மையிற்சிறந்தவனென்பதும், ஜலாதாரம் உண்டுபண்ணி விவசாயிகளின் ஷேமத்தை விருத்தி பண்ணியவனென்பதும் தெரியக்கிடக்கின்றன.

விவாசாயிகள் சிறப்புடன் விளங்கினமையால் வியாபாரம் மிகச்செழித்தது. இம்மன்னன் இராஜதானிநகரமாக விளங்கியது பூம்புகாரெனும் காவிரிப்பூம்பட்டினமே. இஃது ஒரு சிறந்த துறைமுகப்பட்டினமாக அக்காலத்திலிருந்தது. கப்பல்கள் திசைமாறியும் நிலைமாறியுஞ் செல்லாமல் துறைமுகத்திற்கு வந்துசேரும்பொருட்டு இப்பட்டினத்தில் அநேக தீபஸ்தம்பங்கள் இருந்தனவாம். இதனை ”இலங்குநீர் வரைப்பிற்கலங்கரை விளக்கமும்” என்ற சிலப்பதிகாரத்தாலுணர்க.

இத்துறைமுகத்தில், குதிரை, கற்பூரம், சந்தனம், அகில் முதலியவை இறக்குமதி செய்யப்பெற்றன; முத்து, பவளம், மிளகு, வாசனைச்சாமான் முதலியவை ஏற்றுமதிசெய்யப்பட்டன. இவ்விதமாக வியாபாரம் நடந்தமையால் அரசனுக்கு ஏற்றுமதி இறக்குமதி மூலமாய் வரக்கூடிய இறைவரியிலிருந்து