உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-8


வருமானமும் அதிகரித்தது கடலோரங்களில் கட்டப்பட்டுள்ள பெரிய பண்டசாலைகளில் இரவும் பகலும் வந்திறங்கிய பண்டப் பொதியின்மீது, அரசனுடைய உத்தியோகஸ்தர்கள் சோழன் கொடியின் அடையாளமாகப் புலிப் பொறியைப் பொறித்து விடுவார்கள். அவ்வாறு பொறித்தபிறகு வரியைக் கொடுத்து ரசீதைப் பெற்றுக்கொண்டுதான் வியாபாரிகள் தமது பண்டங்களை வெளியே எடுத்துப் போவார்கள். இவற்றை,

“அளந்தறியாப்பலபண்டம்
வரம்பறியாமைவந் தீண்டி
யருங்கடிப்பெருங்காப்பின் வலியுடைவல்லணங்கினோன் புலிபொறித்துப்புறம்போக்கி”

என்ற செய்யுளடிகளாலறிக. வியாபாரத்திற்காக வெளியூர்களிலிருந்து வந்துள்ள வர்த்தகர்கள் உள்ளூரிலிருந்த வர்த்தகர்களோடு இனிமையாகக் கலந்து வாழ்ந்தார்கள். இவர்கள் ”பதிபழகிக் கலந்தினிதுறையும்” வர்த்தகர்கள் என்று சிறப்பிக்கப்பட்டிருக் கிறார்கள்.

இம்மன்னர்பெருமான் போர் செய்யவிரும்பி வட திசைக்குச் சென்று வடபுலத்தரசர்களை வென்று, அங்கு எதிரே குறுக்கிட்ட இமய மலையைச் செண்டினால் அடித்து அதன் பிடரிடத்தே தனது புலியைப் பொறித்து வந்தானென்பது,

”இருநிலமருங்கிற் பொருநரைப்பெறா அச்
செருவெங்காதற்றிருமாவளவன்”
.........
.....சிமயப்பிடர்த்தலைப்

”கொடுவரியேற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு”

என்னும் சிலப்பதிகாரத்தினானும்,


”செண்டுகொண்டு கரிகாலனொருநாளினிமயச்
         சிமயமால்வரை திரித் தருளிமீளவதனைப்
பண்டுநின்ற படிநிற்கவிது வென்றுமுதுகிற்
         பாய்புலிக்குறிபொறித்தலுமறித்த பொழுதே”

என்னும் கலிங்கத்துப் பரணியானும்,