உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-8


”சிலந்தியுமானைக்காவிற்றிருநிழற்பந்தர்செய்து
உலந்தவனிறந்த போதேகோச்செங்கணானுமாகக் கலந்தநீர்க்காவிரி சூழ்சோணாட்டுச் சோழர்தங்கள் குலந்தனிற்பிறப் பித்திட்டார்குறுக்கைவீரட்டனாரே”

என்றும்,

சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருநின்றியூர் 1

”திருவும்வண்மையுந் திண்டிறலரசுஞ் சிலந்தியார் செய்த செய்பணி கண்டு”, மருவுகோச்செங்கணான்றனக் களித்த வார்த்தை கேட்டு நுன் மலரடியடைந்தேன்” என்றும் நமது சமயாசாரிய சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய பாசுரங்களாலும் நன்கறியலாம்.

இம்மன்னன் தனது தாய்வயிற்றிலிருந்து காலந்தாழ்த்துப் பிறந்தமை யாற் சிவந்தகண்களை யுடையனாயிருந்தன்; இவனை, செங்கணானென்று யாண்டும் வழங்கல் இக்காரணம் பற்றியே யென்க.

இம்மன்னனது இராஜதானிநகரமாக விளங்கியது உறையூர்; இஃது அக்காலத்திற் பேரரணுடையதோர் சிறந்தநகர மா யிருந்தது. பண்டைத் தமிழ்நூல்களிற் கோழியூர் என்று வழங்கப்படுவதும் இந்நகரமேயாம். இதன்காரணத்தை, ”முற்காலத்து ஒரு கோழியானது யானையைப் போர்தொலைத்தலான் அந்நிலத்திற் செய்த நகர்க்குச் கோழியென்பது பெயராயிற்று[1] என்னும் அடியார்க்குநல்லார்கட்டுரையானு முணர்க.

இம்மன்னர்பெருமான் புறநாட்டரசர்களைவென்று தன்னி ராஜ்யத்தை விஸ்தாரனப்படுத்தவிரும்பி, வஞ்சிசூடி, சேரநாட்டின் அரசனாகிய சேரன்கணைக்காவிரும்பொறைமேற் சென்றனன்; இவர்கள் இருவர்க்கும் கழுமலம்[2] என்னும் ஊரின்கண் ஒரு பெரும்போர் நடந்தது; அப்போரிற் சோழன்செங்கணான் வாகை மிலைந்ததுடன், சேரமானையும், அவன் இன்னுயிர்த் தோழரும்


  1. “முறஞ்செவி வாரணமுன் சமமுருக்கிய”
    புறஞ்சிறை வாரணம்” என்பது சிலப்பதிகாரம் (பக். 247-248)
  2. சீகாழி