உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-8


திருமங்கையாழ்வார் புகழ்ந்தோதலாலும், இவ்வரசர் பெருமானது போர்வீரமும் ஆண்மையும் நன்கு விளங்கும்.

இவ்வரசன் சிறந்தகல்விமான்; உலகநூல் முற்றக்கற்றுப் பல துறைப்பயிற்சியுமுடையனாயிருந்தனன். செந்தமிழ்ப் புலவர்களை மிக ஆதரித்துவந்த சோழமன்னர்களுள் இவனும் ஒருவன்.

இம்மன்னன் மிக்கசிவபக்தன்; இவன் அறுபான் மும்மை நாயன் மார்களில் ஒருவனென்றும், ஸ்ரீமத் - சுந்தரமூர்த்தி சுவாமிகளால், திருத்தொண்டத்தொகையில் வணக்கங்கூறப்பெற்ற வனென்றும் முன்னரே கூறியுள்ளேன். இதனால் இம்மன்னர் பெருமானது சிவபக்தியின் மாண்பு எத்தன்மைத் தென்பது நன்கறியக்கிடக்கின்றது. இவன் சைவ சமயத்தில் மிக ஈடுபட்டவனேனும் வைணவத்திலும் அபிமான முள்ளவனென்பது திருமங்கையாழ்வார் பாசுரங்களினால் அறியப் படுகிறது. சோழ நாட்டில் அநேகசிவாலயங்கள் இவனால் எடுப்பிக்கப்பட்டுள்ளன. இதனை ”எண்டோளீசர்க் கெழின்மாட மெழுபது செய் துலகமாண்ட, திருக்குலத்துவளச் சோழன்”[1] என்னும் திருமங்கையாழ்வார் வாக்கானும்,

”மந்திரிகடமை யேவிவள்ளல் கொடையனபாயன் முந்தைவருங்குலமுதலோனாய முதற்செங்கணான் அந்தமில்சீர்ச் சோணாட்டிலகனாடு தொறுமணியார் சந்திரசேகரன மருந்தானங்கள் பலசமைத்தான்”[2]

என்னும் பெரியபுராணச் செய்யுளானும் அறியலாம்.

நன்னிலம், திருஅம்பர், தண்டலைநீணெறி, திருவானைக்கா, வைகல் முதலான ஸ்தலங்களில் எடுப்பித்த சிவாலயங்கள் இவனால் எடுப்பிக்கப்பட்டனவென்று தேவாரத்தினால் தெரிகிறது.

இனி, இவ்வரசனைப்பற்றிவழங்கும் ஒரு சிறுகதை வரைகின்றேன்; இவன் உறந்தையம்பதிக்கருகில் காவிரியில் நீராடுங்கால் தனதுமுத்தாரம் ஆற்றில்விழுந்து காணாமற்போக,


  1. திருமங்கையாழ்வார் பெரியதிருமொழி ஆறாம் பத்து,ஆறாவது அம்பரம், 8-ஆவது பாசுரம்
  2. பெரியபுராணம் கோச்செங்கட்சோழநாயனார் புராணம், 14ஆம் பாசுரம்