உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 8


தொடர்ச்சியாய் ஆட்சிபுரிந்திருக்கின்றனர். ஒவ்வொருவனும் தனித்தனி ஆட்சிபுரிந்த காலம் 25 வருஷமாக இதில்100 வருஷங்கள் சென்றிருக்க வேண்டும். அதன் பிறகு சோழ மன்னர்களைப்பற்றி ஒன்றுந்தெரியவில்லை. இதில் 50 வருடங்கள் சென்றிருக்க வேண்டும். பிறகு செங்கணானிருந்ததாகத் தெரிகிறது. ஆகையாற் சோழன் செங்கணான் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவனாதல் வேண்டும்.

இவ்வரசன்காலத்தில் தொண்டியென்னும் நகரின்கண் சேரமான் கோக்கோதைமார்பன் என்னும் ஓரரசனிருந்ததாகப் புற நானூற்றால் தெரிகிறது.