உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 8


நகர் வேற்றரசரால் தாக்கமுடியாத அரண்வலியுடையதென்றும், மலைக் கணங்கள் போன்ற மாளிகைகளையுடையதென்றும் கூறுவர், இதனை,

“ஆர்வலர்குறுகினல்லதுகாவலர் கனவினுங்குறுகாக்கடியுடைவியனகர் மலைக்கணத்தன்னமாடஞ்சிலம்ப”

என்னும் அடிகளிற்காண்க.

இவனதுகொடையைச் சிறப்பிப்பதோர்விஷயம் புறநானூற்றில் காணப்படுகிறது. அஃதாவது; இவ்வள்ளல் ஒருகாலத்து உண்டோர்க்கு நெடுங்காலம் ஜீவித்திருத்தலைச் செய்யும் அருமைபெருமை வாய்ந்ததோர் நெல்லிக்கனியைப் பெற்று, தானுண்டு நெடுநாள் உயிர்வாழ்ந்திருத்தலைக் காட்டிலும் ஔவையைப் போன்ற நல்லிசைப் புலமை மெல்லியலார் நெடுநாளிருப்பின், தமிழகத்திற்கு மிக்க நன்மையெனக் கருதி அவருக்கு அதனை அளித்தனன் என்பதாம். இதனை,

“........தொன்னிலைப்
பெருமலைவிடரகத்தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனிகுறியா தாதனின்னகத்தடக்கிச்
சாதனீங்கவெமக்கீந்தனையே” (புறம். 91)

என ஔவையாரும்,

“....மால்வரைக்
கமழ்பூஞ்சாரற்கவினிய நெல்லி
யமிழ்துவிளைதீங் கனியௌ வைக்கீந்த
வுரவுச் சினங்கனலு மொளிதிகழ் நெடுவே லரவக்கடற்றானையதிகனும்” (சிறுபாணாற்றுப்படை 99-103)

என இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனாரும் கூறுதல் காண்க. அன்றியும், ”இனியவுளவாகவின்னாதகூறல்- கனியிருப்பக் காய் கவர்ந்தற்று” என்னும் திருக்குறள் விசேடவுரையில், ஆசிரியர் பரிமேலழகரும் இனிய கனிகளென்றது ஔவையுண்ட நெல்லிக் கனிபோலமிழ்தாவனவற்றை என்று இச்செய்தியைக்