உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

21


குறித்திருக் கின்றனர். இவ்வரலாற்றால் இவனது வள்ளன்மை நன்கு புலப்படும்.

இவன் இரவலர்க்கினியனாய்ப் புரவலர்க்கின்னானாய் நின்ற பெருநிலையை ஔவையார் மிகவும் பாராட்டிக்கூறுவர். இதனை,

”ஊர்க்குறுமாக்கள் வெண்கோடுகழாஅலி
னீர்த்துறை படியும் பெருங்களிறு போல
வினியை பெருமவெமக் கேமற்றதன் றுன்னருங்கடாஅம்போல
வின்னாய் பெருமநின் னொன்னா தோர்க்கே”

எனவரு மினியபாடலானறிக.

இப்பெருந்தகையைப் பாடியபுலவர்பெருமக்கள், ஔவையார் பெருஞ்சித்திரனார், பொன்முடியார், பரணர் என்போர். இவர்களுள் நல்லிசைப் புலமைமெல்லியாருள் ஒருவராகிய ஔவையாரே இவ்வள்ளலது அருமைபெருமைகளை அதிகமாக வெளியிட்டவர். வேள்- பாரிக்குக் கபிலர்போலவும், வேள்- ஆய்க்கு உறையூர் ஏணிச்சேரிமுட மோசியார் போலவும், சேரமான் கணைக்காலிரும் பொறைக்குப் பொய்கையார் போலவும். கோப்பெருஞ் சோழற்குப் பிசிராந்தையார் பொத்தியார் போலவும், அதியமான்நெடுமானஞ்சிக்கு ஔவையாரே பெரிதும் நட்புரிமைபூண்டவராவர். இவன் றன்பால் என்றைக்கும் ஒருபடியான பேரன்பே பூண்டிருந்தனனென்பதை.


”ஒருநாட் செல்லலமிரு நாட்செல்லலம் பலநாட் பயின்று பலரொடு செல்லினுந் தலைநாட் போன்ற விருப்பினன்மாதோ வணிபூணணிந்தயானையியறே ரதியமான்” (புறம்.101)</poem>}}

என்னும் செய்யுளடிகளில் நன்குவிளக்கி ஔவையார் பெரிதும் புகழ்ந்திருக்கின்றனர்.

இவ்வள்ளலது முன்னோர்களே தேவர்களைப் போற்றி வழிபட்டும் அவர்கட்கு வேள்விக் கண் ஆவுதியையருந்து