உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-8


வித்தும் விண்ணுலகிலிருந்து பெறற்கரிய கரும்பை இவ்வுலகிற் கொணர்ந்தனரென்பது,

“அமரர்ப்பேணியு மாவுதியருத்தியு
மரும்பெறன் மரபிற்கரும்பிவட்டந்து நீரகவிருக்கையாழி சூட்டிய
தொன்னிலை மரபினின் முன்னோர்போல”

என்னும் புறப்பாட்டினடிகளால் அறியப்படுகின்றது.

இம்மழவர்பெருமான் யுத்தத்திற் பேர்பெற்றவீரன். இவன் பரணர்[1] என்னும் நல்லிசைப் புலவர் புகழ்ந்து பாடும்படி கோவலூரை வென்றா னென்று 99- ம் புறப்பாடல் அறிவிக்கின்றது. அன்றியும், இவன்றனக்குப்பகைவர்களாய ஏழரசருடன் போர் செய்துவாகை மிலைந்தனன்[2] இதனை,


”..அமையாய்செருவேட்
டிமிழ்குரன் முரசினெழுவ ரொடுமுரணிச்
சென்ற மர்கடந்து நின்னாற்ற றோன்றிய வன்றும்பாடுநர்க்கரியை”

என்னும் புறப்பாட்டடிகளால் அறியலாம் .

இவன், நல்லிசைப்புலவராகிய ஔவையாரை, அக்காலத்துக் கச்சியையாண்ட தொண்டைமானுழைத் தூதனுப்பியதாக 95- ம் புறப்பாட்டால் தெரிகிறது. இவன் எக்காரணம்பற்றி அங்ஙனந் தூதனுப்பினானென்று தற்காலத்து அறியக்கூடவில்லை. அத்தொண்டைமான் தன் போர்வலியின் பெருமையுணருமாறு தன்படைக்கலக் கொட்டிலைக் காட்ட ஔவையார் அவற்றைப் பார்த்து ”இப்படைக் கருவிகளெல்லாம் போரிற்பயன் படாமை யாற் பீலியணிந்து மாலைசூட்டிக் காம்புதிருத்தி நெய்யணிந்து


  1. அதிகமான் வீரமுங் கொடையும் பற்றிப் பரணராற் புகழ்ந்து பாடப்பட்டுள்ளான் என்பது கீழ்க்குறித்த அகநானூற்றுச்செய்யுட்களால் விளங்கும். ..நெடுநெறிக்கு திரைக்கூர் வேலஞ்சி கடுமுனையலைத்த கொடு
    விலாடவராகொள் பூசலிற்பாடு சிறந்தெரியும் பெருந்தொடி” (அகம். 372) ”..வாய்மொழி
    நல்லிசைபிழைப்பறியக் கழறொடியதியன்” (அகம். 162)
  2. அவர்களது நாடுகளையும் கைப்பற்றிக் கொண்டனன் என்பர் புறநானூற்றுரையாசிரியர்.