பக்கம்:தீபம் யுகம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 QC தீபம் யுகம் அம்சங்களுடன் கூடவே மலேசியா மற்றும் ஈழம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளையும், அங்குள்ள எழுத்தாளர்கள் எழுதிய கதைகளை யும் சிறப்பு அம்சங்களாகப் பெற்றிருந்தன. மலேசிய இலக்கிய மலரில், ரெ. கார்த்திகேசு, ரெசுவப்பா, க. கிருஷ்ணசுவாமி, சை. பீர்முகம்மது, எம். குமாரன், எழுதிய கதைகள் பிரசுரமாயின. சி. கமலநாதன் மலேசியாவில் இந்தியத் தொழிலாளி கள் பற்றியும், சி. வடிவேல் குரங்கு ஆண்டு பலன் என்றும் கட்டுரை கள் எழுதியுள்ளார். ஈழத்து இலக்கிய மலர், மலேசிய மலரை விட அதிகமாக அந் நாட்டு இலக்கிய விஷயங்களைத் தாங்கியுள்ளது. இலங்கையர் கோன், வ.அ. இராசரத்தினம், டொமினிக் ஜீவா, எஸ். பொன்னுத் துரை, கனக, செந்திநாதன், செ. கணேசலிங்கன், கே. டானியல், எம்.ஏ. ரஹ்மான், இர. சந்திரசேகரன், சிறுகதைகள். மகாகவி, தான் தோன்றிக்கவிராயர், பாலபாரதி, நாவற்குழியூர் நடராசன், திமிலைத் துமிலன், இ. முருகையன், ச.வே. பஞ்சாட்சரம், வித்துவான் க. வேந்தன் கவிதைகள். இலங்கை மலைநாட்டுத் தமிழர் - இர. சிவலிங்கம், தமிழுக் கொரு நாவலர் - சி. தில்லைநாதன், இலக்கியம் கற்பித்தல் - கார்த்தி கேசு சிவத்தம்பி, கைலாசபதி கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஈழத்து வர்ணனைகள் என்று பல எழுத்தாளர்களின் படைப்புக ளிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள் வெளியிடப்பட்டன. செம்பியன் செல்வன், செ. கதிர்காமநாதன், சானா, காவலூர் ராசதுரை, மு. தளையசிங்கம், இ. நாகராஜன், தெளிவத்தை ஜோசப், அ. முத்துலிங் கம், செ. யோகநாதன் ஆகியோரின் எழுத்துக்கள் வர்ணனைப் பக் கங்களில் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும், ஆகஸ்ட் மாத தீபம் சுதந்திர தினச் சிறப்பிதழ் ஆகவும், அக்டோபர் இதழ் தீபாவளிச்சிறப்பிதழ் எனவும் வெளியிடப்பட்டன. 1969 அக்டோபர் இதழ் காந்தி நூற்றாண்டுச் சிறப்பிதழாகப் பிரசுரம் பெற்றது. - 'நாட்டுக்கும் பண்பாட்டுக்கும் உதவும் நல்ல இலக்கியப் படைப் புக்களை உருவாக்குவதே என்றும் என் நோக்கமாகும் என்று நா. பா. கூறியுள்ளார். அந்த நோக்கத்தின் சிறப்பான வெளிப்பாடுகளா கவே தீபம் சிறப்பிதழ்கள் ஒளிர்ந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/101&oldid=923189" இலிருந்து மீள்விக்கப்பட்டது