பக்கம்:தீபம் யுகம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 其01 16. நா. பா. வின் பிரயாணங்கள் தீபம் ஆசிரியர் என்ற தன்மையில் வெளிநாடுகளுக்குச் செல் லும் வாய்ப்புகள் நா. பாவுக்குக் கிட்டின. குறிஞ்சிமலர், பொன் விலங்குநாவல்களின் ஆசிரியர் என்ற முறையில், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடையே நா. பா.வின் பெயர்நன்கு அறிமுகமாகி யிருந்தது. அதனாலும், இலக்கியப் பத்திரிகை தீபத்தின் பரவுதலினா லும், அயல் நாடுகளின் தமிழன்பர்கள் நா. பா. வை வரவேற்க ஆவலுடன் இருந்தார்கள். 1967 ஏப்ரலில் நா. பா. மலேசியா சென்றார். அங்கு பல இடங்களில் நடைபெற்ற இலக்கிய விழாக்களில் கலந்து கொண்டார். அவருடைய மலேசியச் சுற்றுப் பயணத்தை விவரித்து, 'மலேசியா வில் தீபம் ஆசிரியர் என்று சா. ஆ. அன்பானந்தன் கட்டுரை எழுதி 磊T订。 பிறகு, 1976ல் நா. பா. சோவியத் யூனியன், போலந்து நாடுக ளின் பயணத்தை மேற்கொண்டார். ஒன்றரை மாதங்கள் அங்கு பிரயா ணம் செய்தார். போலந்திலிருந்து மார்ச் இரண்டாவது வாரம் இங்கி லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்விச்சர்லாந்து, ரோம், எகிப்து, குவெய்த் ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தார். சென்னைக்குத் திரும்பி வந்ததும், தன் பயண அனுபவங்களை நா. பா. தீபம் இதழில் எழுதலானார். அக்கட்டுரைத் தொடர் நான்கு இதழ்களுக்கு மேல் வரவில்லை. அவரது அயல்நாடுகளின் பயணம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் பின்னர் 'கல்கி பத்திரிகையில் தொடர்ந்து வந்தன. அப்புறம் புத்தகமாக பிரசுரமாயின. பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மலைமீது பூக்கும் குறிஞ்சிமலர் மலை மேல் பூத்திருப்பதாகத் தகவல் கிட்டியது. 'குறிஞ்சி மலர் நாவலாசிரியர் நா.பா. அந்தப் பூக்கள் மலர்ந்து கிடப்பதை கண்ணாறக் கண்டு மகிழ ஆசைப்பட்டார். ஆகவே 1969 செப்டம்பரில் அவர் கோடைக்கானல் போனார். அங்கே மலைமீது குறிஞ்சி பூத்துக் கிடக்கம் இடத்தைக் கண்டு பிடிப்பது அவருக்கு சிரமமான அனுபவமாகவே இருந்தது. மலை யில் எந்தப் பகுதியில், எந்தப்பள்ளத்தாக்கில் பூத்துக்கிடந்தாலும் சரி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/102&oldid=923190" இலிருந்து மீள்விக்கப்பட்டது